முஸ்லிம்களிடம் பிளவு - ஜம்மியத்துல் உலமா நோக்கி, தலதா அடித்துள்ள பந்து
முஸ்லிம் தனியார் திருத்தச் சட்ட அறிக்கையை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க முடியாமல் இருப்பதற்கு திருத்தம் தொடர்பில் நியமிக்கப்பட்ட குழுவினுள் ஏற்பட்டிருக்கும் பிளவே காரணமாகும். இக் குழு இரண்டாக பிளவுபட்டுள்ளது. அவர்களை இணக்கப்பாட்டுக்கு கொண்டுவர பல முயற்சிகளை எடுத்தும் பயனளிக்கவில்லை. இவர்களின் பிளவால் நானே இக்கட்டான நிலைக்கு ஆளாகியுள்ளேன் என நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்தார்.
முஸ்லிம் தனியார் திருத்தச்சட்ட அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்காது தொடர்ந்து இழுத்தடிக்கப்பட்டு வருவது தொடர்பாக 'விடிவெள்ளி' வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் பதிலளிக்கையில்,
முஸ்லிம் தனியார் சட்டத்தில் முஸ்லிம்களின் விவாக மற்றும் விவாகரத்து சம்பந்தமாக திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளன. இதற்காக 18 பேர் கொண்ட குழுவொன்று அமைக்கப்பட்டிருந்து. குறித்த குழுவானது இற்றைக்கு 9 வருடங்களுக்கு முன்னர் மிலிந்த மொரகொட நீதி அமைச்சராக இருக்கும்போதே நியமிக்கப்பட்டது. இதன் தலைவராக நீதியரசர் சலீம் மர்சூப் செயற்பட்டார்.
நான் நீதி அமைச்சராக நியமிக்கப்பட்டதன் பின்னர் பெண்கள் தொடர்பான நடவடிக்கைகளை மகளிர் விவகார அமைச்சருடன் இணைந்து செயற்படும்போது பெண்கள் குழுவொன்று முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பாக கேள்வியெழுப்பினர். அதனைத் தொடர்ந்து குறித்த குழுவின் தலைவருடன் கதைத்து, தொடர்ந்தும் காலம் கடத்தாமல் குழுவின் அறிக்கையை தருமாறு கேட்டுக்கொண்டேன். அதன் பிரகாரம் கடந்த ஜனவரி 22 ஆம் திகதி குழுவின் அறிக்கையை என்னிடம் சமர்ப்பித்தனர்.
அத்துடன் அறிக்கையை சமர்ப்பித்த பின்னர் தலைவர் நீதியரசர் சலீம் மர்சூப், இந்த அறிக்கையின் இறுதித் தீர்மானத்தில் குழுவில் இருக்கும் 18 பேரும் ஒரு நிலைப்பாட்டில் இல்லை என தெரிவித்தார். அதாவது குழுவில் தலைவர் மர்சூபுடன் 9 பேர் ஒரு நிலைப்பாட்டிலும் சிரேஷ்ட சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா தலைமையில் உலமாக்கள் மற்றும் சட்டத்தரணிகள் ஆகியோர் அடங்கிய மற்றும் 9 பேர் வேறு நிலைப்பாட்டிலும் இருக்கின்றனர். ஆனால் குழுவின் தலைவர் சலீம் மர்சூப் குறித்த குழுவின் செயலாளராக செயற்பட்ட, எமது நீதி அமைச்சின் செயலாளரையும் உள்ளடக்கியே 9 பேர் என்ற குழுவை அறிக்கையில் காட்டியுள்ளார்.
இது தொடர்பாகவும் பாரிய எதிர்ப்பை மற்ற அணியினர் தெரிவித்து வந்தனர். அதனால் அந்த அணியினரையும் நான் சந்தித்து கலந்துரையாடினேன். இதன்போது அவர்கள் அறிக்கையின் இரண்டு அல்லது மூன்று விடயங்கள் தொடர்பாக இணக்கம் இல்லை.
அதில் ஒன்றுதான் திருமணத்தின் போதான வயதெல்லை தொடர்பானதாகும். அறிக்கையில் முஸ்லிம் ஆண்களின் வயதெல்லை 18 எனவும் பெண்களின் வயதெல்லை 16 என்றும் பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் இந்த விடயத்துக்கு 16 வயதுக்கு ஒரு பிரிவினர் இணக்கம் தெரிவிக்கின்றபோதும் வயது தொடர்பாக ஷரீஆ சட்டமும் உள்வாங்கப்படவேண்டும். ஷரீஆ சட்டத்துக்கு எதிராக சட்டம் நிலைநாட்ட முடியாது என்று தெரிவிக்கின்றனர்.
அடுத்த விடயம்தான் பெண் காதி நீதிபதிகள் நியமிக்கப்படலாம் என அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கு பாயிஸ் முஸ்தபா தரப்பில் இருக்கும் 9 உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதுபோன்ற ஒருசில விடயங்களாலேயே குறித்த குழுவுக்கு முஸ்லிம் தனியார் சட்ட திருத்த சட்டமூலம் தொடர்பாக ஒரு இணக்கப்பாட்டுக்கு வரமுடியாமல் இருக்கின்றது.
அத்துடன் இந்த விடயத்தில் நான் தொடர்புபடாமல் இரண்டு பிரிவினரையும் ஒரே நேரத்தில் அழைத்து இதற்கு தீர்மானம் ஒன்றை எடுக்க முயற்சித்தேன். என்றாலும் அதுவும் சாத்தியமாகவில்லை. இவர்களை ஒரு இணக்கப்பாட்டுக்கு கொண்டுவர என்னால் எடுக்கவேண்டிய அனைத்து முயற்சிகளையும் நான் எடுத்துள்ளேன்.
அதனால் முஸ்லிம் தனியார் திருத்த சட்ட சிபாரிசு அறிக்கையை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்து அங்கீகரித்துக் கொள்ளாமல் நாங்கள்தான் தொடர்ந்து காலம் கடத்திவருவதாக சிலர் எங்கள்மீது குற்றம்சுமத்தி வருகின்றனர். இது தொடர்பாக அமைக்கப்பட்ட குழு இரண்டாக பிளவு பட்டுள்ளதால் நாங்களே இக்கட்டான நிலைமைக்கு ஆளாகியுள்ளோம்.
அதனால் இந்த அறிக்கையை பொதுவான அறிக்கையாக இன்னும் சில தினங்களில் இணையத்தளத்தில் பிரசுரிக்க திட்டமிட்டுள்ளோம். அத்துடன் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இதன் பிரதியை வழங்க தீர்மானித்துள்ளேன். அடுத்த பாராளுமன்ற அமர்வில் இதனை வழங்கி, இதுதொடர்பாக அவர்களது ஆலோசனைகளை வழங்க குறித்த குழுவின் 18 பேரையும் அழைத்து அவர்களுடன் சந்திப்பொன்றை ஏற்படுத்திக்கொடுக்க தீர்மானித்துள்ளேன். அத்துடன் நான் முஸ்லிம் அல்லாதவர் என்ற காரணத்தினால் அமைச்சர் என்ற ரீதியில் இது தொடர்பாக எனக்கு தீர்மானம் எடுக்க முடியாமல் இருக்கின்றது. அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவும் சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபாவின் தரப்பிலேயே இருக்கின்றது.
அத்துடன் காதி நீதிவான் நியமனம் நீதிச்சேவை ஆணைக்குழுவின் பரிந்துரைக்கமையவே வழங்கப்படுகின்றது. அவ்வாறு இல்லாமல் அதனையும் திறமையின் அடிப்படையில் வழங்கும் முறையொன்றை ஏற்படுத்தவுள்ளேன். ஏனெனில் அதில் பல பிரச்சினைகள் இடம்பெற்றுள்ளதாக எனக்கு தகவல் கிடைத்திருக்கின்றது. எனவே முஸ்லிம் தனியார் சட்ட திருத்த சிபாரிசு அறிக்கையை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்து அதற்கான அங்கீகாரத்தை பெற்றுக் கொள்ள நான் தயாராகவே இருக்கின்றேன். என்றாலும் பிளவுபட்டிருக்கும் குழு உறுப்பினர்கள் பொதுவான இணக்கப்பாட்டுக்கு வரும் வரைக்கும் என்னால் எதுவும் செய்யமுடியாது என்றார்.
அஸ்ஸலாமு அலைக்கும்
ReplyDeleteமுஸ்லிம் உம்மத்துக்களே தௌஹீத் ஜமாத்தையும் சேர்த்து ஆலோசனை பெறும் தருணம் இது.சிந்தியுங்கள்
Shariya rules from islam.
ReplyDeleteWe should act n follow that.
Acju stayong on that point.insha allah everything will be fine
இதிலும் இயக்கம் வேண்டுமா சகோ.hameed
ReplyDeleteமார்க்க அறிஞர்கள் மத்தியில் ஒரு விடயத்தில் வித்தியாசமான கருத்துக்கள், அவைகள் கொண்ட பல்வேறு வித்தியாசமான இயக்கங்கள் இருப்பது இயல்பானதாகும்.
ReplyDeleteதகுதியான ஒவ்வோர் மார்க்க அறிஞரும் தனிப்பட்ட முறையிலோ இயக்கங்களின் பிரதிநிதிகளாகவோ, ஆலோசனை அடிப்படையில் முடிவுகள் எடுத்து இயங்கும் அகில இலங்கை உலமா சபையில் அங்கத்துவம் பெற்று உலமா சபையின் இருப்பைப் பலப்படுத்த வேண்டும். அதுவே சமுதாயத்தின் பலமாகும்.
பிற சமுதாயங்கள் மற்றும் அரசாங்கம் சம்பந்தப்பட்ட விடயங்களை, மார்க்க அறிஞர்கள் தமக்குள் ஒன்றாய் இருந்து ஆலோசித்து ஒற்றுமையாக ஒரே முடிவாக வெளியிடுவதே நமக்கான பலமும் பாதுகாப்பும் ஆகும்.
ஒற்றுமையின் முக்கியத்துவம் பற்றி அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்:
"நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள்; உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் - மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் - அதை அல்லாஹ்விடமும், (அவன்) தூதரிடமும் ஒப்படைத்துவிடுங்கள் - இதுதான் (உங்களுக்கு) மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும்."
(அல்குர்ஆன் : 4:59)
www.tamililquran.com
பிரிவினைகள் இன்னுமின்னும் பற்பல பிரிவினைகளுக்கு வித்திடும். இறுதியில் அனைவரையும் பலவீனர்களாக்கும்.
ஒற்றுமை அனைவரதும் இலக்கான ஈருலக வெற்றிகளையும் எளிதாக்க இயலுமாக்கும் வலிமை கொண்டது.
அதுவே, நம் அனைவரினதும் தேவை.
Take advice from tawhid jamath also, they will explain miss. Thalatha athhukorala with diplomatic and beautiful way
ReplyDeleteThis is a Religious matter, must be consulted with SLTJ only and not strongly with ACJUS as they don't know about Islam.
ReplyDeleteAs it is related with religion, everything must be formed based on Quran and Strong Hadhees. In clarifying and dividing Hadhees from Strong to weak, ACJUS is not educated at all. They believe everything as Hadhees .
Islamic Law related matters mustn't be discussed and handed over to alcoholic Parliament people, even if they are Muslim Maps.
ReplyDeleteif cannot get advice from Thawheeth jamath , ask advice from Siya...... Why ACJU not Like Tawheeth ??
ReplyDeleteWe hope ACJU will be strong Organization this the time to Prof.
Should be discuss with all jamath. jamathey Islmi, Tablik Jamath & Tawheeth Jamath. Don't be selfish. remand Allah is one The last Messenger Is prf Mohammed. we should Fallow His path. not for Politician side.
if cannot get advice from Thawheeth jamath , ask advice from Siya...... Why ACJU not Like Tawheeth ??
ReplyDeleteWe hope ACJU will be strong Organization this the time to Prof.
Should be discuss with all jamath. jamathey Islmi, Tablik Jamath & Tawheeth Jamath. Don't be selfish. remand Allah is one The last Messenger Is prf Mohammed. we should Fallow His path. not for Politician side.