Header Ads



அலரி மாளிகையில் இன்னும் பல ஆச்சரியங்கள் - கோத்தபயவிடம் 2 யானைகள்

அலரி மாளிகையில் அதி உயர்ரகத்தைச் சேர்ந்த 43 நாய்கள் வளர்க்கப்பட்டு வந்திருக்கின்றது. அவற்றிற்காக குளிரூட்டப்பட்ட அறைகள் என்பனவும் அலரி மாளிகையில் அமைக்கப்பட்டிருந்தது. இதற்குப் புறம்பாக வெளிநாடுகளில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட 23 வகையான பறவை வகைகளும் அலரி மாளிகையில்  பொது மக்கள் பணத்தில் வளர்க்கப்பட்டிருக்கின்றது.

பாதுகாப்புச் செயலாளர் கோட்டபே ராஜபக்ஷ பெரும் பணச் செலவில் சூறா மீன்களை வளர்த்து வந்திருக்கி;னறார். பாரிய தண்ணீர் தாங்கிகளில் வளர்க்கப்பட்ட இந்த மீன்களைப் பராமறிக்கின்ற பொறுப்பு கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது. 

இதிலுள்ள வேடிக்கை என்னவென்றால் செல்லப் பிராணியாக வளர்க்கப்பட்ட இந்த மீன்களை தேர்தல் தோல்விக்குப் பின்னர் 9ம் திகதி கல்கிஸ்சையிலுள்ள ஒரு மீன் வியாபரிக்கு அவற்றை விற்று விட்டு சென்றிருக்கின்றார்கள் இவர்கள். அத்துடன் செல்லப் பிராணியின் கதையும் முடிந்தது.

இது தவிர கோட்டாபே ராஜபக்ஷ இரு யானைகளையும் வளர்த்து வந்திருக்கின்றார். தோல்வியின் பின்னர் இந்த இரு யானைகளும் பனாகொடை இராணுவ முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றது. இந்த யானைகளுக்கான உறுதிப் பத்திரங்களை இவர் வைத்திருந்தாரா என்று பொலிசார் இப்போது விசாரித்து வருகின்றார்கள்.

அமெரிக்க போன்ற ஒரு நாட்டிலாவது இப்படியெல்லாம் நடந்திருக்குமா என்று தெரியவில்லை. இறைவனுக்கு அடுத்து முஸ்லிம்களின் பாதுகாப்பிற்கு ராஜபக்ஷவை நம்பி இருந்தவருக்கு இந்த செய்தி அர்ப்பனம்! 


7 comments:

  1. இறைவனுக்குப் அடுத்து முஸ்லிம்களின் பாதுகாப்பிற்கு ராஜபக்ஷவை நம்பி இருந்தவருக்கு மட்டுமல்ல, முஸ்லிம்களின் பாதுகாப்பை அல்லாஹ் எங்கள் ஐவரிடம்தான் ஒப்படைத்திருக்கின்றான் என்று சொன்னவருக்கும் அர்ப்பணமாகட்டும்

    ReplyDelete
  2. இறைவனுக்குப் அடுத்து முஸ்லிம்களின் பாதுகாப்பிற்கு ராஜபக்ஷவை நம்பி இருந்தவருக்கு மட்டுமல்ல, முஸ்லிம்களின் பாதுகாப்பை அல்லாஹ் எங்கள் ஐவரிடம்தான் ஒப்படைத்திருக்கின்றான் என்று சொன்னவருக்கும் அர்ப்பணமாகட்டும்

    ReplyDelete
  3. above said dedicated to son of kattankudy hisbullah too

    ReplyDelete
  4. இறைவனுக்கு அடுத்து இன்னொருவரை ( இன்னொன்றை) எப்படி வைக்க முடியும்..????? இப்படி கூறுபவருக்கு இடம் கொடுத்து வைத்திருக்கும் கூட்டத்தை கொஞ்சம் சிந்தித்து பாருங்கள். இப்படியானவர்களை எல்லாம் அரசியலில் இருந்து ஒதுக்கி வைக்க வேண்டும்.

    ReplyDelete
  5. The Great Wonders of Asia in this century!

    ReplyDelete
  6. ஏன் இன்னும் மௌலானாக்கள் பொய்களை மெய்யாக்கும் அஸ்வர் ஹாஜி போன்றவர்களுக்கும் ஹஜ் கொட்டாக்களுக்கு சண்டை போடும் அமைச்சர்களுக்கும் சமர்ப்பனமாகட்டும்

    ReplyDelete
  7. அவனைப்பற்றி சொல்லி என்னுடைய வாயை தயவு செய்து கிளர வேண்டாம். வெட்கமில்லாமல் மீண்டும் இங்கு வந்து தொத்திக்கொண்டு இருக்க ஆசைப்படுகின்றனர். இதற்கு பதிலாக நாக்கை பிடுங்கிக்கொண்டு சாவதே மேல்.

    ReplyDelete

Powered by Blogger.