Header Ads



வரி ஏய்ப்பில் ஈடுபடும் JVP - திலித் ஜயவீர தெரிவிப்பு


ஜே.வி.பி கட்சியின் உறுப்பினர்கள் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர குற்றம் சுமத்தியுள்ளார்.


வரிச் செலுத்தாது கட்சி நிதியத்தின் ஊடாக கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்வதாக ஜே.வி.பி உறுப்பினர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.


கட்சி நிதியம் என்ற போர்வையில் இந்த மோசடிகள் இடம்பெறுவதாகக் குறிப்பிட்டுள்ளார். பாரியளவு கட்டடங்களை கட்டி, பாரியளவில் நிதி செலவிட்டு வருவதகாக் குற்றம் சுமத்தியுள்ளார்.


தங்களது அரசியல் செயற்பாடுகளுக்காக ஜே.வி.பி.யினர் பணம் செலவிடும் முறையை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.


அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல்வாதிகள் நாட்டின் சாதாரண சட்டத்தின் கீழ் கணக்காய்விற்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.


அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் கட்சிகளின் நிதியங்கள் கணக்காய்விற்கு உட்படுத்தப்படுவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.


வர்த்தகர்களிடம் பணம் பெற்றுக்கொள்வதாக கடந்த அரசாங்கங்களின் மீது குற்றம் சுமத்தி வரும் ஜே.வி.பி.யும் தோழர்களிடமிருந்து நன்கொடை பெற்றுக்கொள்வதாகவும் இவை இரண்டிற்கும் என்ன வித்தியாசம் என்பது புரியவில்லை என திலித் ஜயவீர நாடாளுமன்றில் கேள்வி எழுப்பியுள்ளார்.


அரசியல் கட்சிகளை கணக்காய்விற்கு உட்படுத்தக்கூடிய சட்டமொன்று உருவாக்கப்பட வேண்டுமென நீதி அமைச்சரிடம் கோரிக்கை விடுப்பதாகத் தெரிவித்துள்ளார். 

No comments

Powered by Blogger.