Header Ads



பாராளுமன்றத்தில் Dr அர்சுனாவுக்கு ஏற்பட்டுள்ள பரிதாபம்


யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் நாடாளுமன்றில் இன்று -08- உரையாற்றும் போது நேரடி ஒளிபரப்பு தடை செய்யப்பட்டுள்ளது.


சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவின் முன்னைய தீர்மானத்தின் பிரகாரம் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


இதன்போது “சபாநாயகரால் 2025 மார்ச் 19ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தொடர்பில் வழங்கப்பட்ட உத்தரவின் பிரகாரம் இந்த காட்சிக்ள நேரடியாக ஒளிபரப்பப்பட மாட்டாது” என்ற தகவல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.


நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிராக சபாநாயகருக்கு பல முறைப்பாடுகள் கிடைத்ததை அடுத்து, 2025 மார்ச் 20ஆம் திகதி முதல் 8 நாடாளுமன்ற அமர்வுகளுக்கு இவ்வாறு நேரடி ஒளிபரப்பு தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.