காசா குழந்தைகளின் உணவு, என்ன தெரியுமா..? (வீடியோ)
பாலஸ்தீனிய தாய் ஹனாடி, காசாவில் உள்ள தனது கூடார தங்குமிடத்தில் பூஞ்சையால் பாதிக்கப்பட்ட கடினமான, பழைய ரொட்டித் துண்டுகளை தனது குழந்தைக்கு வழங்க தயார்படுத்துகிறார்.
ஐ.நா. குழந்தைகள் நிறுவனமான யுனிசெஃப் உடனான வீடியோ நேர்காணலில் " நான் பூஞ்சையை அகற்றி தேநீரில் நனைத்து என் குழந்தைகளுக்கு உணவளிக்கிறேன்," "எனக்கு வேறு வழியில்லை," என்று அவர் கூறினார்.
உணவு, மருந்து, சுத்தமான நீர், எரிபொருள் போன்ற அனைத்து உதவிப் பொருட்களையும் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிக்குள் நுழைவதைத் தடுத்துள்ளதால், ஹனாடி "காசாவில் உயிர்வாழ போராடும் லட்சக்கணக்கானவர்களில்" ஒருவர் என்று யுனிசெஃப் சுட்டிக்காட்டுகிறது.
Post a Comment