Header Ads



பிரதமர் ஹரிணிக்கு பதிலாக, பிமல் ரத்நாயக்க பிரதமராக நியமிக்கப்படலாம்

 
இலங்கையில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்குப் பின்னர் பிரதமர் பதவியில் மாற்றம் செய்யப்படக்கூடிய சாத்தியம் உண்டு என மேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் வருண ராஜபக்ச தெரிவித்துள்ளார்.


மேலும் பிரதி நிதி அமைச்சர் பதவியிலும் மாற்றம் செய்யப்படலாம் என அவர் ஊகம் வெளியிட்டுள்ளார்.


இந்த விடயம் தொடர்பில் அவர் தனது சமூக ஊடக கணக்கில் காணொளி ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.


தற்போதைய பிரதமர் ஹரிணி அமரசூரியவிற்கு பதிலாக பிமல் ரத்நாயக்க பிரதமராக நியமிக்கப்படலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.


மேலும், பிரதி நிதி அமைச்சர் பதவிக்கு ஒரு தொழிலதிபர் நியமிக்கப்படலாம் என்பதற்கான தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


வருண ராஜபக்ச, கடந்த காலத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) மேல் மாகாண சபை குழுத் தலைவராக கடயைமாற்றியுள்ளார் என்பதுடன் தற்போது ஐக்கிய மக்கள் சக்தியின் தொகுதி அமைப்பாளராகவும் பணியாற்றுகின்றார்.


இதேவேளை, இந்த தகவல் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியோ அல்லது மக்கள் விடுதலை முன்னணியோ இதுவரையில் அதிகாரபூர்வ தகவல்கள் எதனையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.