தகப்பன் இல்லை என்பதனால், சிறார்களது எதிர்காலம் ஒருபோதும் இருளடைந்து விடக்கூடாது!
“கல்வி கற்பதற்கு பொருளாதார வசதி இல்லாத காரணத்தினால், தகப்பன் இல்லை என்பதனால், சிறார்களது எதிர்காலம் ஒருபோதும் இருளடைந்து விடக்கூடாது” எனும் தாரக மந்திரத்தை கருப்பொருளாகக் கொண்டு நாடளாவிய ரீதியில் கலாநிதி அலவி ஷரீப்தீன் இவ்வாறான பல்வேறு கல்விப் பணிகளை பல வருடங்களாக நிறைவேற்றி வருகின்றார்.
காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலையின்போது தந்தையை இழந்து தான் அனாதையாக்கப்பட்ட போது, வசதி வாய்ப்புக்களோடு இருந்த குடும்பங்கள், வாழ்ந்த சமூகம் கண்மூடியிருந்த சூழ் நிலை போல், இன்னுமொரு குழந்தைக்கு ஏற்படக்கூடாதென்பது அவரது நோக்காகும்.
அண்மைய அவரது விஜயத்தின் போது கலாநிதி அலவி ஷரீப்தீன் அவர்கள் பல மாவட்டங்களுக்குச் சென்று தான் பண உதவி வழங்கி வருகின்ற தகப்பனை இழந்த பிள்ளைகளை சந்தித்தார்.
இவ்வடிப்படையில் குருநாகல் மாவட்ட அனாதைப் பிள்ளைகளை சியம்பலாகஸ்கொடுவ மண்டபத்தில் சந்தித்து, பணப் மற்றும் வேறு பரிசில்களையும் வழங்கினார். இந்நிகழ்வு கடந்த திங்கள் 14-04-2025 அன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் இக்ராம் நளீமி, சட்டத்தரணி சமீர் நளீமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
இந்நிகழ்வில் பேசிய கலாநிதி அவர்கள், தன் கல்லூரி பட்டதாரி நளீமீக்களின் ஆதரவுடன் இப்பணியினைச் செய்வது அதற்கு பெரும் மகிழ்ச்சி தருவதாகத் தெரிவித்தார்.
அவர் மேலும் பேசுகையில், தந்தை இல்லை என்கின்ற ஒரே காரணத்திற்காக இக்குழந்தைகளின் எதிர்காலம் கேளவிக்குட்படுத்தப்படக் கூடாதெனவும், இதனை உறுதி செய்வது, பாதுகாவலர்களும் முழுச் சமூகமுமே எனவும் குறிப்பிட்டார்.
தகப்பனை இழந்த சிறார்கள் பற்றிய விடயங்களை சீராக சேகரித்து அவர்களுக்காக கிரமமான முறையில் வழிகாட்டுதல்களையும் கொடுப்பனவுகளையும் வழங்கி வருகின்றார். இன, மத பாகுபாடின்றி மானுடர்களுக்கு பணி செய்து, தேச புனர் நிர்மாணத்திற்காக அனைவரும் பங்களிக்க வேண்டுமென்ற கருத்தையும் வலியுறுத்தினார்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட மாணவர்களும், பாதுகாவலரும் தம் கருத்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்தனர்.
Post a Comment