Header Ads



பாதுகாப்புச் செயலாளரின் விசேட அறிக்கை


இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான நீண்டகால பாதுகாப்பு உறவுகள் குறித்து பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துய்யகொந்தா விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

 

இரு நாடுகளும் பல தசாப்தங்களாக நல்லுறவுப் பாதுகாப்பு உறவுகளைப் பேணி வருவதாக அவர் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். 


குறிப்பாக பாதுகாப்பு தொடர்பான விடயங்களில் கூட்டு இராணுவ மற்றும் கடற்படை பயிற்சிகள் ஆகியவற்றால் இருதரப்பு உறவுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. 


குறிப்பாக, இலங்கை முப்படைகளின் சுமார் 750 அதிகாரிகளுக்கு இந்தியா ஆண்டுதோறும் விடயதானம் சார்ந்த பயிற்சியை வழங்குவதாக பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துய்யகொந்தா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


No comments

Powered by Blogger.