Header Ads



எம்மை விமர்சனம் செய்து, பாவத்தை சம்பாதிக்கின்றனர் - கொட்டச்சி Mp


எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தை விமர்சனம் செய்வதற்கு மதத்தை கையில் எடுத்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கொட்டச்சி தெரிவித்துள்ளார்.


மதம் என்பது அரசியல் ரீதியாக திக்கற்றவர்களின் இறுதி ஆயுதம் எனவும் எதிர்க்கட்சிகள் தற்பொழுது அதனை பயன்படுத்துவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.


களுத்துறையில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டமொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


புனித தலாத சின்னங்களை தரிசனம் செய்வதற்கு 16 ஆண்டுகளின் பின்னர் மக்களுக்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.


கடும் வெயிலில் சிலர் உணவு நீர் இன்றி புனிதப் பொருட்களை வழிபாடு செய்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.


எதிர்க்கட்சியினர் அரசியல் மேடைகளில் எம்மை விமர்சனம் செய்து பாவத்தை சம்பாதித்துக் கொள்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.


தலதா மாளிகையின் புனிதப் பொருட்களை காட்சிப்படுத்துவதன் மூலம் எவ்வித அரசியல் இலாபமும் ஈட்ட முயற்சிக்கவில்லை என நிலாந்தி கொட்டச்சி தெரிவித்துள்ளார்.  

No comments

Powered by Blogger.