Header Ads



மாகாணத் தேர்தலை எதிர்பார்த்தவர்களுக்கு, ஏமாற்றத்தை வழங்கியுள்ள அமைச்சர்


எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுடன் ஆறு மாதங்களுக்குள் மூன்று தேர்தல்கள் நடத்தப்பட்டதால், இந்த ஆண்டு மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படாது என்று அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.


பாணந்துறையில் நடந்த, உள்ளூராட்சிமன்றத் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், அரசாங்கம் எல்லா நேரங்களிலும் தேர்தல்களை நடத்திக் கொண்டே இருக்க முடியாது, அபிவிருத்தித் திட்டங்களையும் செயல்படுத்த வேண்டும் என்றார்.


"உள்ளூராட்சித் தேர்தல்களுக்குப் பிறகு, பிரதான தேர்தல்கள் முடிவடையும். மாகாண சபைத் தேர்தல் மட்டுமே நடத்தப்பட உள்ளன. சில சட்டங்களை மாற்ற வேண்டியிருப்பதாலும், நாட்டின் அபிவிருத்திக்கு அதிக அளவு பணம் ஒதுக்கப்பட்டுள்ளதாலும் மாகாண சபைத் தேர்தல்இந்த ஆண்டு தேர்தல் நடத்தப்படாது," என்று அவர் கூறினார். 

No comments

Powered by Blogger.