சிகிச்சைக்கு வந்த யுவதிக்கு டாக்டர் பாலியல் துன்புறுத்தல் - நீர்கொழும்பு வைத்தியசாலையில் சம்பவம்
- இஸ்மதுல் றஹுமான் -
நீர்கொழும்பு வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெறுவதற்கு வந்த யுவதிக்கு டாக்டர் ஒருவர் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட இளம் யுவதி இது தொடர்பாக வைத்தியசாலை அத்தியட்சகரிடம் எழுத்து மூலம் முறைப்பாடு செய்துள்ளார்.
அவரின் முறைப்பாட்டிற்கு இணங்க யுவதியை வைத்தியசாலை வார்ட்டில் அனுமதித்து பரிசோதனை இடம்பெறுகின்றன.
நேற்று 3ம் திகதி காலை சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனையின் பின்னர் மீண்டும் வார்ட்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த வைத்தியர் அண்மையில் நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலைக்கு இடமாற்றம் பெற்று வந்தவர் என தெரியவருகிறது.
இது தொடர்பாக வைத்தியசாலை அத்தியட்சகரிடம் வினவியபோது சம்பவம் உண்மையென்றும் இது தொடர்பாக உள்ளக மட்டத்திலும் சட்டரீதியாகவும் விசாரணைகள் இடம் பெறுவதாகவும் விசாரணை முடிவுகளுக்கு அமைய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
Post a Comment