Header Ads



அரபு உலகத்தினால் மெச்சப்படும், இப்தேஹால் அபு அல்-சாத்


வலதுபுறத்தில் இருப்பவர் முஸ்தபா சுலைமான்.


மைக்ரோசாப்டின் செயற்கை நுண்ணறிவுத் துறையின் தலைவர், பாலஸ்தீன மக்களைக் கண்காணிக்கவும், ஏமாற்றவும், மிரட்டவும் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்களை இஸ்ரேலுக்கு வழங்குவதற்குப் பொறுப்பான மூத்தவர்களில் ஒருவர். அவர் சிரியர், பெரும்பாலும் ஒரு முஸ்லிம் குடும்பத்தைச் சேர்ந்தவர்.


இடது பக்கத்தில் நிற்பவர், இப்தேஹால் அபு அல்-சாத். மெறோக்கோ நாட்டை பூர்வீகமாக கொண்டவர்.


உலக இளைஞர்களுக்கான ஒரு கனவு இடத்தில் பணிபுரிகிறார்.


மைக்ரோசாப்டின் 50வது ஆண்டு விழாவின் போது இப்தால், முஸ்தபாவின் உரையின் நடுவில், அவர் எழுந்து நின்று, (காசாவில் அப்பாவி மக்களை கொலை செய் உதவி செய்து) மைக்ரோசாப்ட் மற்றும் முஸ்தபா ஆகியோர் 50 ஆயிரம் தியாகிகளின் இரத்தத்தால் தங்கள் கைகளை மாசுபடுத்தியுள்ளனர் என்று உலகம் முழுவதும் கூறினார்.


அவள் செய்தது கோடிக்கணக்கான மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது


அவளுடைய வேலை அவள் இழக்கலாம், அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படலாம். இதற்காக அவள் மன்னிப்பு கேட்கவில்லை.


எனினும் இஸ்லாமிய உலகம் அவளை தற்போது மெச்சிக் கொண்டிருக்கிறது.


ஹமாஸும் அவளை பாராட்டி அறிக்கை வெளியிட்டுள்ளது.



No comments

Powered by Blogger.