Header Ads



புன்னகையுடன் பேச்சைத் தொடங்கிய மாணவி திடீர் உயிரிழப்பு (வீடியோ)


மகாராஷ்டிராவில் கல்லூரி பிரியாவிடை நிகழ்ச்சியில் உரையாற்றிக்கொண்டுருந்த மாணவி மயங்கி விழுந்து உயிரிழத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


மகாராஷ்டிராவின் தாராஷிவ் மாவட்டத்தில் உள்ள ஷிண்டே கல்லூரியில் பிஎஸ்சி இறுதியாண்டு பயின்று வந்த 20 வயது பெண் வர்ஷா, நேற்று பிரியாவிடை நிகழ்வில் மேடையில் பேசிக்கொண்டிருந்தார். 


வர்ஷா புன்னகையுடன் தனது பேச்சைத் தொடங்கினார், ஆனால் திடீரென்று அவரது முகம் வெளிறிப்போய், மயக்கமுற்று மேடையில் விழுந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் அவர் வைத்தியாசாலைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வைத்தியர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர். வர்ஷா மாரடைப்பால் இறந்ததாக நம்பப்படுகிறது. 



No comments

Powered by Blogger.