பௌத்த விகாரை நிர்மாணிப்பதால், சூழல் பாதுகாக்கப்படும் - திலித்
எந்தவொரு அழகிய சூழலிலும் பௌத்த விகாரை ஒன்றை நிர்மாணிப்பதன் ஊடாக அந்த சூழல் பாதுகாக்கப்படுமே தவிர ஒருபோதும் அழிவடையாது என சர்வஜன அதிகாரத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர தெரிவித்தார்.
தம்புள்ளையில் நிர்மாணிக்கப்படவுள்ள சிறி கௌதம சுகத முனி விகாரைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் இன்று (20) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
விகாராதிபதி பெரலபனாதர மேதங்கர தேரரின் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
சுமார் 200 அடி உயரத்திற்கு திட்டமிடப்பட்டுள்ள இந்த விகாரையின் கட்டுமானத்திற்கு தெரண ஊடக வலையமைப்பு தனது ஆதரவை வழங்கி வருகிறது.

Post a Comment