Header Ads



கோட்டாபயவை ஜனாதிபதியாக்க முஸ்லிம்கள் சிலர் தங்களது உயிர்களை தியாகம் செய்தார்களா...?

 
ஜே வி பியின்தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் இப்ராஹிம் ஹாஜியாரை விசாரணை செய்தால் ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியை ஜனாதிபதி அநுர அறிந்துகொள்ள முடியும் என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌சதெரிவித்துள்ளார்.


அநுராதபுரம் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே நாமல் ராஜபக்ச இந்த விடயத்தை குறிப்பிட்டார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,


இவர்கள் கூறுவதை பார்த்தால் கோட்டாபய ராஜபக்‌சவை  ஜனாதிபதியாக்க முஸ்லிம்கள் சிலர் தங்களது உயிர்களை தியாகம் செய்துள்ளார்கள். அதில் இருவர் ஜே. வி. பி தேசிய பட்டியல் உறுப்பினர் இப்ராஹிம் ஹாஜியாரின் புதல்வர்கள்.


இவர்கள் கூறுவது உண்மை என்றால் கோட்டாபயவை ஜனாதிபதியாக்க ஜேவிபி உறுப்பினர்களின் பங்கு இருந்துள்ளது.அதனை தனியாக விசாரணை செய்ய வேண்டும் என நாமல் ராஜபக்‌ச குறிப்பிட்டார்.


ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்ட போது சி ஐ டிக்கு பொறுப்பாக இருந்து தாக்குதலை தடுக்காதவரே தற்போதைய அரசில் பாதுகாப்பு செயலாளராக உள்ளார். தாக்குதலை தடுக்காதவர்களிடம் இருந்து எப்படி நீதியை எதிர்ப்பார்க்க முடியும் என நாமல் ராஜபக்‌ச கேள்வி எழுப்பினார். IBC

No comments

Powered by Blogger.