கசிப்பு வியாபாரிகளின் வீடுகளுக்கு முன் மக்கள் கொந்தளிப்பு
குறித்த போராட்டம் இன்று(6) 10 மணியளவில் முன்னெடுத்துள்ளார்கள்.
மதுவை ஒழிப்போம் மக்களை காப்போம்,உழைத்து வாழப்பழகு, ஊரை அழித்து வாழாதே, போதைப்பொருளை ஒழிப்போம் விசமிகளை அழிப்போம் போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பாதாதைகளை கையில் தாங்கியவாறு இந்த போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.
கிராமத்தில் இனம்காணப்பட்ட சட்டவிரோத கசிப்பு வியாபாரிகளின் வீடுகளுக்க முன்னால் சென்று அவர்களுக்காக எச்சரிக்கையாக இன்றுடன் கசிப்பு விற்பனையினை நிறுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
அவர்களின் வீட்டு படலைகளில் பதாதைகளையும் ஒட்டியுள்ளார்கள்.
மக்களின் இந்த கோரிக்கைகள் கிராம சேவகர் ஊடாக பிரதேச செயலாளருக்கும்,பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கும் எழுத்து மூல அறிக்கை ஒன்று அனுப்பிவைக்கவுள்ளதாகவும் மக்கள் தெரிவித்துள்ளார்கள்.
Post a Comment