முஸ்லிம்களுக்கு நல்ல பெயர் வரவேண்டும் என்பதற்காக என்மீது பழி சுமத்தியுள்ளனர் - பிள்ளையான்
நான் ஒரு விடுதலைப் போராட்டத்தின் முன்னாள் போராளி என்ற காரணத்தினால், உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான பாரிய குற்றச்சாட்டை என்மீது சுமத்தியிருக்கின்றார்கள் என்று கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன்(பிள்ளையான்) தெரிவித்துள்ளார்.
அசாத் மௌலானா இஸ்லாமிய மதத்தை சார்ந்தவர், ஸஹ்ரானும் இஸ்லாமிய மதத்தை சார்ந்தவர், எனவே இலங்கையில் உள்ள முஸ்லிம்களுக்கு நல்ல பெயர் வரவேண்டும் என்பதற்காக நான் ஒரு விடுதலை போராட்டத்தில் இருந்தவர் என்பதை அடிப்படையாகக் கொண்டு இந்த பழியினை என்மீது சுமத்தியுள்ளனர் என்றும் அவர் கூறினார்.
ஐபிசி தமிழுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இந்த விடயத்தை அரசியல் மயப்படுத்த வேண்டிய தேவை சிங்கள தலைவர்களுக்கும் இருந்தது. காத்தான்குடியிலிருந்த ஸஹ்ரான் முஸ்லீம் மத மாற்றத்தை அடிப்படையாக கொண்டு இந்த பணியை செய்தார்.
இதற்கமையவே உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னர் பல முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டார்கள் எனவும் பிள்ளையான் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment