அநுரகுமாரவிடம் திலித் விடுத்துள்ள வேண்டுகோள்
அமெரிக்காவின் புதிய சுங்க வரி கொள்கை உள்ளிட்ட இலங்கை எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து விவாதித்து தீர்வுகளைத் தேடுவதற்காக சர்வகட்சி மாநாடு ஒன்றை கூட்டுமாறு சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர கோரிக்கை விடுத்துள்ளார்.
அம்பாறையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய திலித் ஜயவீர இந்தக் கருத்துகளை வெளியிட்டார்.
"பிரதமர் மோடியின் இந்த இராஜதந்திர பயணம் முடிந்த பின்னர், நாம் ஒரு பாடத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என்றால்... அவர் எவ்வாறு நம்மைப் போலவே 70 ஆண்டுகளாக துன்பப்பட்ட இந்தியாவை தொழில்முனைவு என்ற கருத்தாக்கத்தின் அடிப்படையில் இன்று வேகமாக முன்னேற்றுகிறார் என்பதைப் பார்க்க வேண்டும். இந்தியாவின் நடுத்தர வர்க்கம் இன்று 300 மில்லியனைத் தாண்டியுள்ளது. அது அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையை விட அதிகம். எனவே, நான் மிகவும் பணிவுடன் ஜனாதிபதியை அழைக்கிறேன், எல்லா பக்கங்களிலிருந்தும் நமக்கு வந்துள்ள சவால்களைப் பரிசீலித்து... ஒரு பக்கம் ட்ரம்பின் சுங்கவரி, மறுபக்கம் புவிசார் அரசியல் ரீதியாக நாம் பலவீனமாக இருக்கும் நிலையை கவனத்தில் கொண்டு, உடனடியாக ஒரு சர்வகட்சி மாநாட்டைக் கூட்டுங்கள். இந்த சர்வகட்சி மாநாட்டில் எங்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்குங்கள், இதை சரிசெய்வதற்காக. நாங்கள் இந்த நாட்டை நேசிக்கும் மக்கள், எங்களுக்கு ஒரு பங்களிப்பை வழங்குங்கள். இந்த அன்பு கலந்த வேண்டுகோளுக்கு செவிசாய்க்கவும். அப்படியானால், எங்களுக்கு அரசியல் செய்ய ஒரு நாடு மிச்சமாக இருக்கும். இந்த அரசாங்கம் உதவி கோரினால், அதை வழங்க நாங்கள் தயாராக இருக்கிறோம்."
Post a Comment