Header Ads



ஏழை பென்குயின்கள், ட்ரம்பிற்கு என்ன செய்தன..?


பென்குயின்கள் மற்றும் நீர்நாய்கள் வாழும் இரு தீவுகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 10 சதவீத வரி விதித்துள்ளார். 


அவுஸ்திரேலியாவின் தென்மேற்கே அமைந்துள்ள ஹியர்ட் மற்றும் மெக்டொனால்ட் தீவுகளுக்கே அமெரிக்க ஜனாதிபதி வரி விதித்துள்ளார். 


அமெரிக்க பொருட்கள் மீது அதிக இறக்குமதி வரி விதிக்கும் நாடுகளுக்கு அதே அளவு பரஸ்பர வரி விதிக்கப்படும் என ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்ததின்படி, 180க்கும் மேற்பட்ட நாடுகளுக்கான வரி விகிதங்களை வெளியிட்டார். 


இதன் போது மனிதர்களே வசிக்காத இரு தீவுகளுக்கும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் 10 சதவீத வரி விதித்திருக்கிறார். 


அமெரிக்க ஜனாதிபதியின் இந்த செயற்பாடு தொடர்பில் அவுஸ்திரேலிய வர்த்தக அமைச்சர் இது மிகப்பெரிய தவறு என்பது தெளிவாகப் புலப்படுவதாகச் சர்வதேச ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். 


அவுஸ்திரேலிய வர்த்தக அமைச்சர் தெரிவிக்கையில், 


“ஏழை வயதான பென்குயின்கள், அவை ட்ரம்பிற்கு என்ன செய்தன என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால், இது ஒரு அவசரமான செயல்முறை என்பதற்கான அறிகுறி." என அவுஸ்திரேலிய வர்த்தக அமைச்சர் நகைச்சுவையாக கருத்துரைத்துள்ளார்.

No comments

Powered by Blogger.