NPP க்கு வாக்களித்தவர்கள், வரிசைகளில் முதலில் நிற்கத் தயாராகுங்கள்...
(எம்.மனோசித்ரா)
அரசாங்கம் மக்களுக்கு எந்த நிவாரணங்களையும் வழங்காமல் சர்வதேச நாணய நிதியத்திடம் கடனை மீள செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீடிக்குமாறு கோரி கடிதம் அனுப்பியிருக்கிறது. ஆனால் ரணில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இவ்வாறு கால அவகாசம் கோரவில்லை. இன்று ரணில் ஆட்சியில் இருந்திருந்தால் எலோன் மாஸ்க் ஊடாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வரி நிவாரணத்தைப் பெற்றிருப்பார் என முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
களுத்துறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இந்த அரசாங்கம் மக்களுக்கு எந்த நிவாரணங்களையும் வழங்காமல் சர்வதேச நாணய நிதியத்திடம் கடனை மீள செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீடிக்குமாறு கோரி கடிதம் அனுப்பியிருக்கிறது. ஆனால் ரணில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இவ்வாறு கால அவகாசம் கோரவில்லை.
அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பான பெபேறுகள் இப்போதிருந்தே வெளிவர ஆரம்பித்துள்ளன. மே 6ஆம் திகதியின் பின்னரே முழுமையான பெபேறுகள் வெளிவரும்.
மே மாதத்திலிருந்து இந்த நாட்டில் மீண்டும் பொருளாதார நெருக்கடிகள் ஆரம்பமாகும். ஆகஸ்டில் அதன் பிரதிபலன்கள் வெளிவர ஆரம்பிக்கும். டிசம்பரில் மீண்டும் வரிசைகளில் காத்திருப்பதற்கு மக்கள் தயாராக வேண்டும். தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்தவர்கள் வரிசைகளில் முதலில் நிற்கத் தயாராகுங்கள்.

Post a Comment