விமானத்தில் நித்திரையான இலங்கையருக்கு அதிர்ச்சி
தாய்லாந்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணி ஒருவரின் பொருட்களை திருடிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பயணியின் பைப்பையில் இருந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நாணயங்களை திருடிய இரண்டு சீன பிரஜைகள் இன்று காலை விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து திருடப்பட்ட பணத்தின் ஒரு பகுதியும் மீட்கப்பட்டுள்ளது.
இலங்கை மற்றும் அமெரிக்காவின் இரட்டை குடியுரிமையைப் பெற்றுள்ள 71 வயதானவரின் பையே இவ்வாறு திருடப்பட்டுள்ளது.
அவர் ராகம, வெலிசறை பகுதியில் வசிக்கும் உறவினர்களை பார்க்க கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்து கொண்டிருந்தார்.
விமானத்தின் பை வைக்கும் இடத்தில் தனது பையை வைத்துவிட்டு பயணி தூங்கிக் கொண்டிருந்தபோது, விமானத்தில் இருந்த இரண்டு சீன நாட்டவர்கள் 2,000 அமெரிக்க டொலர்கள் மற்றும் 60,000 இலங்கை ரூபாயை திருடியுள்ளனர்.
Post a Comment