Header Ads



பிள்ளையானைத் தொடர்ந்து, இன்னும் பலர் கைது செய்யப்பட உள்ளார்கள்


பிள்ளையானைத் தொடர்ந்து பலர் கைது செய்யப்பட உள்ளதாக பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.


குற்றச்செயல்களில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


இவ்வாறானவர்கள் தொடர்பிலான நீண்ட பட்டியலொன்று காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.


கைது செய்யப்பட்டு சிறைக்குச் செல்லும் எவரும் தாம் குற்றம் இழைத்து விட்டதாக கூறுவதில்லை என அவர் தெரிவித்துள்ளார். தான் திருடியதாகவோ அல்லது கொள்ளையடித்ததாகவோ எவரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.


கைது செய்யப்படு நபர்கள் அரசியல் பழிவாங்கல் என தங்களது குற்றங்களை நியாயப்படுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.


ஊடகங்களில் இவ்வாறு கூறினாலும் நீதிபதியின் முன்னிலையில் இவ்வாறு அரசியல் பழிவாங்கல் என கூற முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.


இவ்வாறு குற்றம் சுமத்துவோருக்கு இன்னும் ஒன்றிரண்டு ஆண்டுகளே இவ்வாறு அரசாங்கத்தின் மீது பழி சுமத்த முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.


மாகாணசபைத் தேர்தல்களும் நடத்தப்பட்டதன் பின்னர் இவ்வாறு பழி சுமத்த முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


அரசாங்கம் நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பி வருவதாகவும் இதனை குறுகிய காலத்தில் செய்ய முடியாது எனவும் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார். 

No comments

Powered by Blogger.