துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழப்பு
கட்டுநாயக்காவில் இன்று -08- மதியம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார்.
51 வயதுடைய சீதுவை பகுதியைச் சேர்ந்தவர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
காயமடைந்த நபர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பொலிஸார் இது தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில், இந்த துப்பாக்கிச் சூட்டு சம்வத்திற்கான காரணம் மற்றும் சம்பவத்தின் பின்னணி குறித்து இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகவில்லை.
பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து, மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment