ஜனாஸா எரிப்பில் பாதிக்கப்பட்ட, குடும்பங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் நிகழ்வு
உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரைகளை மீறி, கடந்த கரோனா காலத்தில் கொவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் உடல்கள் கடந்த அரசாங்கத்தால் வலுக்கட்டாயமாக தகனம் செய்யப்பட்டன. இதனால், முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் உரிமை பெரிதும் பாதிக்கப்பட்டது.
இதன் பொருட்டு, கொரோனா தொற்றுக்குள்ளாகிய நிலையில் வலுக்கட்டாயமாக எரிக்கப்பட்டோரின் குடும்பங்களுக்கு ஆதரவு தெரிவித்து பிரார்த்தனை செய்யும் நினைவு தின நிகழ்வொன்று இன்று (06) கொழும்பு 06 இல் அமைந்துள்ள மரைன் கிராண்ட் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது.
இலங்கை முஸ்லிம் சிவில் சமூக அமைப்புக்கள் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில், ஏற்பாட்டுக்குழுவின் அழைப்பின் பேரில் எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச கலந்து கொண்டு தனது வருத்தத்தையும் ஆதரவையும் தெரிவித்தார்.
அடிப்படை மனித உரிமைகளையும், மத உரிமைகளையும் மீறி பலவந்தமாக எரிக்கப்பட்ட முஸ்லிம் ஜனாஸாக்கள் இலங்கை முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் ஆறாத வடுக்களை விட்டுச் சென்றுள்ளன.
Post a Comment