Header Ads



ட்ரம்பின் தீர்மானத்தினால், இலங்கைக்கு ஏற்படவுள்ள பாதிப்புகள்


இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 44 சதவீத வரி விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீர்மானித்துள்ளார்.


அவர் எடுத்த முடிவால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்று பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரயல் துறையின் பேராசிரியர் வசந்த அதுகோரல தெரிவித்துள்ளார்.


இந்த முடிவு சில தொழிற்சாலைகளை மூடுவதற்கும் வழிவகுக்கும் என்று அவர் கூறினார். உலகெங்கிலும் உள்ள 25 நாடுகள் மீது நாளைய தினம் முதல் வரிகளை விதிக்க உள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.


அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 10 சதவீதம் குறைந்தபட்ச வரியை ட்ரம்ப் அறிவித்தார்.


2024 ஆம் ஆண்டில், அமெரிக்கா இலங்கையிலிருந்து 3 பில்லியன் டொலர்களுக்கு மேல் இறக்குமதி செய்தது.


இந்தப் புதிய வரிகள் விதிக்கப்படுவது இலங்கைப் பொருளாதாரத்திற்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.


இந்நிலையில் மாற்றுச் சந்தையை தேடுவதன் மூலம் அமெரிக்காவின் வரி நெருக்கடியை சமாளித்துக் கொள்ள வாய்ப்பாக அமையும் என சுட்டிக்காட்டியுள்ளனர்.


எனினும், இலங்கையில் இருந்து அதிகளவான ஆடைகள் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.