ஜனாதிபதி இப்படிச் செய்தால், அவருக்காக கோயில் கட்டுவோம்
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு மேலும் 1000 ரூபாய் வேதனத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு ஜனாதிபதியினால் முடியுமாயின், அவருக்கு ஆலயம் கட்டுவதற்கும் தாம் தயாராகவுள்ளாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
நோர்வூட் பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் தொடர்ந்தும் வேதனம் அதிகரிக்கப்படுவதை விடவும், பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நிரந்தரத் தீர்வே அவசியமாகவுள்ளதெனவும், ஜீவன் தொண்டமான் கூறினார்.
இதனால் எதிர்கால சந்ததியினர் பயனடைவார்கள் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

Post a Comment