Header Ads



73 வயது முதியவர் படுகொலை


மினுவாங்கொட பிரதேசத்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.


இந்த சம்பவம் நேற்று -13- மாலை மினுவாங்கொட பொலிஸ் பிரிவின் தேவலபொல பகுதியில் பதிவாகியுள்ளது.


உயிரிழந்தவர் கனேஹிமுல்ல, தேவலபொல பகுதியை சேர்ந்த 73 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.


உயிரிழந்தவரின் வீட்டில் வளர்க்கப்பட்ட நாய் சந்தேக நபரின் வீட்டிற்கு சென்றதால் ஏற்பட்ட தகராறில் இந்தக் கொலை நடந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.


கொலையின் பின்னர் சந்தேக நபர் அந்தப் பகுதியை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


சந்தேக நபரைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை மினுவாங்கொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Powered by Blogger.