Header Ads



6 மாதங்களுக்குள் O/L, A/L பரீட்சையில் சித்தியடைந்த மாணவி - தந்தை தெரிவித்துள்ள முக்கிய விடயம்


 கொழும்பு விசாகா வித்யாலயத்தில் கல்வி  பயின்ற மாணவி ரனுலி விஜேசிர்வர்தன, ஒரே வருடத்தில் க.பொ.த. சாதாரண தர மற்றும் உயர்தரப் பரீட்சைகளில்  தோற்றி சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.


குறித்த மாணவி 2024ஆம் ஆண்டு இடம்பெற்ற 2023ஆம் கல்வியாண்டிற்கான க.பொ.த. சாதாரண தரத் பரீட்சையில் தோற்றியிருந்த நிலையில், 8 ஏ சித்திகள் மற்றும் ஒரு பி சித்தியினைப் பெற்றிருந்தார்.


இதனையடுத்து ஆறு மாதங்களுக்குள்ளாகவே 2024ஆம் கல்வியாண்டிற்கான உயர்தரப் பரீட்சையிலும் அவர் தோற்றியிருந்த நிலையில், அதிலும் 3 ஏ சித்திகளை குறித்த மாணவி பெற்று சாதனைப் படைத்துள்ளார். 


ஒரு குறிப்பிட்ட வயதுக்குட்பட்ட மாணவர்கள் பாடசாலை பரீட்சார்த்தியாக உயர்தரப் பரீட்சை எழுத அனுமதிக்கப்படாததால், அவர் முறையான பாடசாலைக் கல்வியில் இருந்து விலகி, ஒரு தனியார் பரீட்சார்த்தியாக பரீட்சைக்குத் தோற்றியுள்ளார்.


இந்த நிலையில், 20 வருட அனுபவமுள்ள ஆசிரியரான அவரது தந்தை, இலங்கையின் கல்வி முறை திறமையான மாணவர்கள் விரைவாக முன்னேற அனுமதிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.