Header Ads



இலங்கைக்கு வரவுள்ள 3 அனகொண்டாக்கள்


விலங்கு பரிமாற்ற திட்டத்தின் கீழ், தெஹிவளை விலங்கியல் பூங்காவுக்கு பல புதிய விலங்குகள் கொண்டு வரப்படவுள்ளதாக தேசிய விலங்கியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்தன ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 


இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, விலங்கியல் பூங்காவுக்கு விரைவில் மூன்று வரிக்குதிரைகள், இரண்டு ஜோடி ஒட்டகச்சிவிங்கிகள், பிரான்சிலிருந்து மூன்று அனகொண்டாக்கள், மாண்டரின் வாத்துகள் மற்றும் இரண்டு பெரிய ஆமைகள் வழங்கப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 


இதற்கு ஈடாக, தேசிய விலங்கியல் திணைக்களம் இரண்டு ஜோடி டோக் மக்காக் குரங்குகள், ஒரு ஜோடி மர அணில்கள், ஒரு ஜோடி நீர் யானைகள், ஒரு ஜோடி மீன்பிடி பூனைகள், ஒரு பச்சை விரியன் பாம்பு மற்றும் ஒரு கண்ணாடி விரியன் பாம்பு ஆகியவற்றை பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ள அந்தந்த நாடுகளுக்கு அனுப்பியுள்ளது. 


அருகிவரும் மற்றும் அச்சுறுத்தலுக்கு உள்ளான உயிரினங்களுக்கான பாதுகாப்பு மற்றும் இனப்பெருக்க முயற்சிகளை ஆதரிக்கும் அதேவேளை, தெஹிவளை விலங்கியல் பூங்காவில் உயிரின பன்முகத்தன்மையை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய விலங்கியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்தன ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.