Header Ads



ஒரே பார்வையில் 29 நாட்களுக்கான ரமழான் கேள்விகள்


Ramadan 01


A. அல் குர்ஆனில் அதிகமாக பெயர் குறிப்பிடப்பட்ட நபி யார்?    அல்லாஹ்வால் அவருக்கு வழங்கப்பட்ட 3 அட்புதங்களைக்  குறிப்பிடுக.


B. "நீர்,  முஹாஜிரீன்கள் மற்றும் அன்ஸாரீன்கள் ஆகிய இரு தரப்பினரிலும் உள்ளவராகும்" என நபி அவர்கள் ஒரு ஸஹாபியைப்பார்த்து கூறினார்கள்: அந் நபித்தோழர் யார்? அவருக்கு வழங்கப்பட்ட பட்டப்பெயர் என்ன ? எதற்காக அவர் அவ்வாறு அழைக்கப் பட்டார்?


Ramadan 02


A. சுஹைப் பின் சினான் அல்-ரூமி என்ற ஸஹாபியுடன் தொடர்பு பட்ட அல் குர்ஆன் வசனம் யாது? அதன் மொழி பெயர்ப்பைத் தருக.


B. அபிசீனியாவிற்கு முஸ்லிம்களின் முதல் ஹிஜ்ரத்  எப்போது இடம்பெற்றது?  அதன் தலைவர் யார்?   அதில் ஆண்கள், பெண்கள் எத்தனை பேர் கலந்து கொண்டனர்? 


Ramadan 03


A. முஸ்அப் பின் உமைர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவுக்கு எதற்காக அனுப்பினார்கள்?   மதீனா வாசிகள் அவர்களுக்கு சூட்டிய பட்டப் பெயர் என்ன?


B. நபி யூனுஸ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மீனின் வயிற்றுக்குள் எத்தனை நாட்கள் இருந்தார்கள்?  அப்போது அவர்கள் ஓதிய வசனம் யாது? அவர்கள் எந்த பகுதிக்கு நபியாக அனுப்பப்பட்டார்கள்?


Ramadan 04


A. ஒரு சகோதரனின் முகத்தை பார்த்து புன்முறுவல் செய்வது இஸ்லாத்தில் என்ன பயனைத் தரும்? அது தொடர்பான ஹதீஸைக் குறிப்பிடுக


B. இஸ்லாத்தின் மூன்றில் ஒரு பகுதி என்று குறிப்பிடப்படும் ஹதீஸ் எது?  அவ் ஹதீஸிலிருந்து பெறும் பயன்கள்  இரண்டைக் குறிப்பிடுக


Ramadan 05


A. கருவறையில் ஒரு குழந்தையின்  கட்டம் கட்டமான வளர்ச்சி  பற்றி விளக்கும் அல் குர்ஆன் வசனத்தைக் குறிப்பிடுக.

B. அல் குர்ஆனை விளங்குவதில் "ILMUL  BALAQA " கலையின் பங்களிப்பு என்ன?


Ramadan 06


A. “அல்லாஹ் ஒவ்வொரு இரவும் முதல் வானத்திற்கு இறங்குகின்றான்" இது தொடர்பாக வந்துள்ள ஆதாரபூர்வமான ஹதீஸை முழுமையாக குறிப்பிடுக.

B. "முஸ்லிம் ஸ்பெயினின் பண்பாட்டுத் தலைநகரான கொர்டோவாவே ஐரோப்பிய மறுமலர்ச்சியின் வளர்ச்சித் தொட்டிலாகும்.”   என்று கூறிய Muslim: The Founders of Science என்ற நூலின் ஆசிரியர் யார்? 


Ramadan 07


A. நபி (ஸல்) அவர்கள் இந்த சமூகத்திடம் தனக்காக வேண்டிய இரு கோரிக்கைகளையும் குறிப்பிடுக?

B. இஸ்லாமிய கல்வி வரலாற்றில் மிக ஆரம்பத்தில் தோன்றிய ஆரம்பப் பாடசாலைகள்  என்ன பெயர் கொண்டு அழைக்கப் பட்டன? 


Ramadan 08


A. “ஜாஹிலியாவின் மக்கள் செய்த மூன்று விடயங்கள் உள்ளன, அவற்றை இஸ்லாத்தில் உள்ளவர்களும்  விட்டு விடுவதில்லை” என்று  நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.   அம்மூன்று விடயங்களையும் குறிப்பிடுக?

B. ஒரு நபித் தோழரது பெயரைக்  குறிப்பிட்ட நபிகளார் (ஸல்) அவர்கள் "அவரைப் போன்று உங்களுக்கு இருக்க முடியாதா?" என்று கேட்டார்கள். குறித்த அந்த சஹாபியின் பெயர் என்ன?  


Ramadan 09


A. “அவ்விரண்டு கால்களும்  மறுமை நாளில் உஹதை விட தராசில் கனமாக இருக்கும்” என நபி (ஸல்) அவர்கள் எந்த நபித் தோழருக்காக எச்சந்தர்ப்பத்தில் கூறினார்கள்.

B. அல் முபாரக் பூரி அவர்கள் ஜாமிஉ அத் திர்மிதி என்ற ஹதீஸ் கிரந்தத்திற்கு விளக்கவுரை எழுதிய நூலின் பெயரென்ன?


Ramadan 10


A. “எனது உருவத்திலும் குணத்திலும் எனக்கு நீ ஒப்பாகி விட்டாய்”  என நபி (ஸல்) அவர்கள் ஒரு தோழரை பார்த்து கூறினார்கள் அந்த நபித் தோழர் யார்? அவருக்கும் நபி (ஸல்) அவர்களுக்கும் இடையிலுள்ள உறவு முறை யாது?

B. மார்க்க தீர்ப்புகளை அதிகம் வழங்கிய நபி தோழர்கள் ஏழு பேரின் பெயர்களை குறிப்பிடுக.


Ramadan 11


A. பச்சை நிற பட்டுத் துணியில்  பதிக்கப்பட்ட ஒரு  உருவத்தை ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு  வந்து, "இவர்தான்  இம்மையிலும் மறுமையிலும் உங்கள்  மனைவி" என்று கூறினார்கள் அந்த பெண்மணி யார்?

B. நபி (ஸல்) அவர்களின் மரணித்த உடலை குளிப்பாட்டியவர்களின் பெயர்களைக் குறிப்பிடுக.


Ramadan 12.


A. பீர் மஊனாவில் கொல்லப்பட்ட நபி தோழர்களின் எண்ணிக்கை யாது ? அதற்கு உடந்தையாக இருந்தவனின் பெயர் யாது ?

B. நபி அவர்களின் காலத்தில் இஸ்லாத்தின் விருந்தினர்கள் என்று அறியப்பட்டவர்கள் யார்?


Ramadan 13


A. சூரத்துல் காபிரூன் இறங்கியதற்கான காரணியைக் குறிப்பிடுக

B. ஹராமாக்கப்பட்ட பத்து  விடயங்கள் அல் குர்ஆனிலுள்ள  ஒரே  சூராவில் அடுத்தடுத்து இரண்டு வசனங்களில் குறிப்பிடபட்டுள்ளது. அவ்விரண்டு வசனங்களின்  தமிழ் மொழிபெயர்ப்பையும்  குறித்த சூராவின் பெயரையும் குறிப்பிடுக.


Ramadan 14


A. அல் குர்ஆன் அதை ஓதுபவருக்கு மறுமையில் பரிந்துரை செய்யும்   என்பதற்கான ஹதீஸ் ஆதாரம் என்ன?

B. இவ்வுலகில் மனிதனுக்கு கிலாபத், இபாதத், இமாரத் என்ற மூன்று பணிகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கு ஆதாரமாக உள்ள மூன்று அல் குர்ஆன் வசனங்களையும் குறிப்பிடுக.


Ramadan 15


A. மனித சமுதாயம் முழுவதுக்குமான "ரிஸாலத்" கி. பி எத்தனையாவது வருடம் வழங்கப்பட்டது. அதன் வரலாற்றுப் பின்னணியை சுருக்கமாக குறிப்பிடுக.

B. பின்வருவன வற்றுக்கான ஹிஜ்ரி ஆண்டுகளைக் குறிப்பிடுக

1. கிலாபத் வீழ்ச்சி 

2. அப்பாஸிய ஆட்சி ஒழிக்கப்படல் 

3. உஸ்மானிய ஆட்சியின் வீழ்ச்சி


Ramadan 16


A. ஒலி எழுப்புவதில் நடுநிலை பேண வேண்டுமென்று அல் குர்ஆன் குறிப்பிடுகின்றது. இது தொடர்பாக வந்துள்ள வசனத்தைக் குறிப்பிடுக.

B. நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் பெண்களின் பேச்சாளர் என அழைக்கப்பட்ட ஸஹாபிப் பெண்மணி யார்? 


Ramadan 17


A. அல்குர்ஆன் ஒரே தடவையில் அருளப்படவில்லை. அது தேவைக்கும், சந்தர்ப்ப சூழ் நிலைகளுக்கும் ஏற்ப தனி வசனமாகவும்> சொற்றொடராகவும்> பல வசனங்களாகவும் அருளப்பட்டது.  தொடர்ச்சியாக பல வசனங்கள் அருளப்பட்ட சந்தர்ப்பங்களும் உண்டு.  


அன்னை ஆயிஷா (ரழி) அவர்களுடைய விடயத்தில் தொடர்ச்சியாக அருளப்பட்ட வசனங்கள் எந்த சூராவில் அமைந்துள்ளது? 

B. “தப்ஸீர்” எனும் சொல்லை போன்று குர்ஆன் விளக்கவுரையுடன் தொடர்பு படும் இன்னுமொரு சொல்லைக்  குறிப்பிடுக. 


Ramadan 18


A. ஜிப்ரீல் (அலை) நபிகளாருக்கு அல்குர்ஆனை ஓதிக்காட்டும் போது அருகில் இருந்து தனது மனனத்தைச் சரிபார்த்துக் கொண்ட சஹாபியின் பெயர் என்ன?

B. அல் குர்ஆனில் ஒரே சந்தர்ப்பத்தில் முழுமையாக இறக்கியருளப்பட்ட சூறாக்கள் மூன்றைக்  குறிப்பிடுக.


Ramadan 19


A. அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரழி) அவர்களுக்காக நபி (ஸல்) அவர்கள் கேட்ட பிரார்த்தனையைக் குறிப்பிடுக.

B. இம்மையும் மறுமையும் சம நிலையில்  நோக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் அல் குர்ஆன் வசனத்தைக் குறிப்பிடுக.  


Ramadan 20


A. அல் குர்ஆனில்  உள்ள சூறா  அந்நஜ்மின்  32 ஆவது வசனத்தில் கூறப்பட்டுள்ள "அல் லமம்" என்பதன் கருத்தையும்>  முழு வசனத்தினது  தமிழ் மொழிபெயர்ப்பையும் தருக.

B. "நீர் மரணிக்கும் வரை முஸ்லிமாக இருப்பீர்" என ஒரு ஸஹாபியிடம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் அந்த நபித்தோழர் யார்?


Ramadan 21


A. தபஉத் தாபிஊன்கள் காலத்தில் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வழிமுறையான  சுன்னாவை பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட 03 திறனாய்வுக் கலைகளையும் குறிப்பிடுக? 


B. சூரா லூக்மானின் ஒரு வசனத்தில்   மனிதர்கள் அறிந்திராத  ஐந்து விடயங்களைப்  பற்றி அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.  அவ் ஐந்து விடயங்களையும் குறித்த வசனத்தையும் குறிப்பிடுக.


Ramadan 22


A. மறுமை நாளின் தொழிற்பாடுகளை வைத்து அதற்கு பல பெயர்கள் உண்டு.   மறுமை நாளின் 03 பெயர்களையும் அவற்றின்  தொழிற்பாடுகளையும்  குறிப்பிடுக.


B. மறுமை நாளில் நபி (ஸல்) அவர்களின் ஷபாஅத்தைப் பெறும் பாக்கியம் யாருக்குக் கிடைக்கும் என்பதை அல்குர்ஆன் தெளிவு படுத்தியுள்ளது. 

அல்குர்ஆனில் உள்ள  02 வசனங்களை தமிழ் மொழிபெயர்ப்புடன் குறிப்பிடுக. 


Ramadan 23


A. சுன்னத்தான  நோன்புகள் நோற்கப்படும்  காலங்கள் எவை ?


B. பிரார்த்தனைகள் அங்கீகரிக்கப்படுவதற்கான  நிபந்தகைகள் 4ஐ குறிப்பிடுக.


Ramadan 24


A. அல்குர்ஆனில் முதல் ஐந்து வசனங்கள் இறக்கப்பட்ட சந்தர்ப்பத்தை  சுருக்கமாக குறிப்பிடுக.


B. அன்னை உம்மு சல்மா (ரழி) அவர்களின் இயற்பெயர் என்ன ? 


Ramadan 25


A. சுவனத்தில் இருக்க மாட்டாது என்று அல்லாஹ் குறிப்பிடும் 4 விடயங்களையும்  ஆதாரத்துடன் குறிப்பிடுக. 


B. அல்  குர்ஆனில்  எச்செயல்  வீரமுள்ள செயளாக வர்ணிக்கப்பட்டுள்ளது என்பதை ஆதாரத்துடன் குறிப்பிடுக. 


Ramadan 26


A. 'ஸகர்' என்பது  தொழாதவர்களுக்கு அல்லாஹ்  தயார்படுத்தி வைத்திருப்பதாகக் கூறும் நரகத்தின் பெயராகும்.  இது தொடர்பாக அருளப்பட்ட  வசனங்களையும் குறித்த சூராவையும் குறிப்பிடுக..


B.   ‘அவர்கள் (கண்ணியமானவர்கள் என) அறியப்பட்டு நோவினை செய்யப்படாமலிருக்க இது சுலபமான வழியாகும்’.  சூரா அஹ்ஸாபின்  இவ்வசனம் எதனுடைய பயன்பாட்டை பற்றி குறிப்பிடுகின்றது.


Ramadan 27


A. மனிதர்களில் சிலரை அல்லாஹ் சிலந்திப் பூச்சிக்கு உதாரணமாக  குறிப்பிடுகிறான்? எதற்காக அவர்கள் அவ்வாறு உதாரணம் காட்டப்படுகின்றார்கள் ? ஆதாரத்துடன் குறிப்பிடுக.


B. பல வருட கால முயற்சியின் பின்னரே இமாம் புஹாரி அவர்கள் தனது ஸஹீஹுல் புஹாரி கிரந்தத்தை தொகுத்து வழங்கினார்கள். 

இமாம் அவர்களுக்கு புஹாரி  கிரந்தத்தை தொகுப்பதற்கு எத்தனை வருடங்கள் தேவைப்பட்டன என்பதைக் குறிப்பிடுக.  


Ramadan 28


A. பேசினால் பொய்  பேசுதல், வாக்குறுதியை மீறுதல்,  நம்பினால் மோசடி செய்தல்    போன்ற துர்குணங்கள்  யாருக்குரியது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இந்தப்  பண்புகளுக்குரிய மனிதர்களுக்கு வழங்கப்படும் தண்டனை என்ன?  அல் குர்ஆன் ஹதீஸ் ஆதாரத்துடன் குறிப்பிடுக


B. பொறாமை கொள்வதினால் ஏற்படும் பிரதான  விளைவு என்ன? ஹதீஸ் ஆதாரத்துடன் குறிப்பிடுக. 


Ramadan 29


A. மறுமை நாளில் முஃமினின் தராசில் வேறெதற்கும் இல்லாத அளவுக்கு  மிகக் கனதியான இருக்கும் ஒரு விடயத்தைப்  பற்றி நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். குறித்த விடயத்தை ஹதீஸ் ஆதாரத்துடன் குறிப்பிடுக. 


B. தொழுகையில் திருடுதல் தொடர்பாக   நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். தொழுகையில் திருடுதல் எவ்வகையில் நிகழ்கின்றது என்பதை குறிப்பிட்டு  அது தொடர்பாக அறிவிக்கப் பட்டுள்ள ஹதீஸ் ஒன்றையும்  குறிப்பிடுக.




No comments

Powered by Blogger.