2600 முஸ்லிம்களை கொல்லப்போவதாக அறிவிப்பு
இச்சம்பவம் புதன்கிழமை இரவு நிகழ்ந்தது. நள்ளிரவு 12 மணியளவில் தனது நண்பர்களுடன் உணவகத்தின் முன்பு நின்று கொண்டிருந்த குல்ஃபாம் உள்ளிட்டோரை இருசக்கர வாகனத்தில் வந்த அந்த கும்பல் தாக்கியது. பாதிக்கப்பட்டவர்களின் பெயரைக்கேட்டு, அவர்கள் முஸ்லிம்கள் என்பதை உறுதிப்படுத்திய பின்னரே தாக்குதல் நடத்தப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
துப்பாக்கிச் சத்தம் கேட்டு ஓடி வந்தவர்களை துப்பாக்கியைக் காட்டி மிரட்டிவிட்டு, தாக்குதல் நடத்திய கும்பல் தப்பிச் சென்றது.
இதனிடையே, இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்று க்ஷத்ரிய கோரக்ஷா தள் அமைப்பின் தலைவன் மனோஜ் சௌத்ரி என்பவன் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளான்.
அதில், பஹல்காம் (காஸ்மீர்) தாக்குதலுக்குப் பழிவாங்கும் விதமாக இரண்டு முஸ்லிம்களைக் கொன்றதாக அவர் கூறினார். மேலும், 26 பேருக்குப் பதிலாக 2600 பேரை கொல்வோம் என்றும் அவர் பகிரங்கமாக அறிவித்துள்ளான். ஜெய் ஸ்ரீராம், பாரத் மாதா கீ ஜெய் ஆகிய முழக்கங்களை எழுப்பியவாறு அவன் தனது பேச்சை முடித்துள்ளான்.
Thejas News

Post a Comment