Header Ads



24 மணித்தியாலத்தில் 80 பேர் தேசிய வைத்தியசாலையில் அனுமதி


கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு செயற்பாடுகளின்போது ஏற்பட்ட விபத்துக்கள் காரணமாக காயமடைந்த சுமார் 80 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இவர்களில் 30 பேர் வாகன விபத்துக்கள் காரணமாக காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


அத்துடன், பட்டாசு தொடர்பான விபத்து ஒன்றில் காயமடைந்த ஒருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


புது வருடப் பிறப்பின்போது பல்வேறு செயற்பாடுகளின்போது திடீர் விபத்துக்கள் ஏற்படுவதாக சுகாதாரப் பிரிவினர் சுட்டிக்காட்டுகின்றனர். எனவே, இத்தகைய விபத்துக்களைக் குறைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவர்கள் அறிவுறுத்துகின்றனர்.



No comments

Powered by Blogger.