Header Ads



தந்தையின் லொறியில் சிக்கி 19 மாத குழந்தை உயிரிழப்பு


பலாங்கொடை - ருக்மல்கந்துர பகுதியில், வீட்டு முற்றத்தில் நிறுத்தப்பட்டிருந்த லொறி ஒன்று பின்னோக்கி இயக்கப்பட்டபோது, வீட்டில் இருந்த 19 மாத குழந்தை, லொறியின் இடது பின்பக்கச் சக்கரத்தின் கீழ் சிக்கி உயிரிழந்துள்ளது.


விபத்தில் படுகாயமடைந்த குழந்தை பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


 39 வயதான குழந்தையின் தந்தை, பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.