Header Ads



கொழும்பு உட்பட மேலும் 18 சபைகளுக்கு தேர்தல் நடத்த எந்தத் தடையும் இல்லை


கொழும்பு மாநகர சபை உட்பட 18 உள்ளூராட்சி நிறுவனங்களுக்காக எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதைத் தடுத்து, விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவை நீக்கி மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று -11- உத்தரவிட்டது. 


அந்த உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு சமர்ப்பிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ள உத்தரவு பிறப்பித்து நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது. 


சட்டமா அதிபரால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணையை பரிசீலித்த பின்னர், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் பதில் தலைவர் மொஹமட் லபார் தாஹிர் மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

No comments

Powered by Blogger.