Header Ads



இலங்கையில் வாழும் 153 வயது ஆமைக்கும், டுபாயிலிருந்து வந்த கரடிக்கும் இன்று எண்ணெய் தேய்ப்பு


சிங்கள தமிழ் புத்தாண்டு சம்பிரதாயங்களுக்கு இணைவாக இடம்பெறும் தலையில் எண்ணெய் தேய்க்கும் நிகழ்வு இன்று (16) இடம்பெற்றது. 


அதன்படி, மிருகக்காட்சிசாலையில் சுப நேரத்தில் தலையில் எண்ணெய் தேய்க்கும் நிகழ்வு யானையிடமிருந்து ஆரம்பமானது. 


இலங்கையில் வாழும் மிகவும் வயதான விலங்கான 153 ஆண்டுகள் பழமையான ராட்சத ஆமையின் தலையிலும் எண்ணெய் பூசப்பட்டது. 


ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு வழங்கப்பட்ட பழுப்பு நிற கரடியின் தலையிலும் எண்ணெய் தேய்க்கப்பட்டது. 


தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையின் பணிப்பாளர் நாயகம் சந்தன ராஜபக்ஷவின் அறிவுறுத்தலின் பேரில், பிரதி பணிப்பாளர் தினுஷிகா மானவடு உட்பட மிருகக்காட்சிசாலையின் முகாமைத்துவ அதிகாரியால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

No comments

Powered by Blogger.