முத்திரை வரியை 100% அதிகரிக்க அரசாங்கம் முடிவு
குறித்த கட்டண அதிகரிப்பானது, இன்று செவ்வாய்க்கிழமை (01) முதல் அமுலுக்கு வரும் என்று நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
எந்தவொரு சொத்தையும் குத்தகைக்கு அல்லது வாடகைக்கு விடும்போது, குத்தகை ஒப்பந்தம் அல்லது வாடகை ஒப்பந்தத்திற்கான முழு காலத்திற்கும் குத்தகை வரி அல்லது வாடகைக்காக ஒவ்வொரு 1,000 ரூவாவிற்கும் அதன் ஒரு பகுதிக்காகவும் 10 ரூபாய் முத்திரை கட்டணம் தற்போது வசூலிக்கப்படுகிறது.
எனினும், குறித்த முத்திரை கட்டணம் ஏப்ரல் முதலாம் திகதி முதல் 20 ரூபாவாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியினால் வெளியிடப்பட்டுள்ளது.
2006ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த முத்திரை வரி திருத்தப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment