Header Ads



இலங்கையில் போர் வீரர்களுக்கு எதிராக UK தடை - NPP அரசாங்கம் மௌனம் காக்கிறதா..?


இலங்கையில் உள்ள போர் வீரர்களுக்கு எதிராக ஐக்கிய இராச்சியம் தடைகளை விதித்ததுள்ளமை தொடர்பில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தனது X தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.


ஐக்கிய இராச்சியத்தின் இந்த தடைகள் மனித உரிமைகள் பற்றியவை அல்ல, மாறாக LTTE ஆதரவாளர்களின் தொடர்ச்சியான செல்வாக்கின் விளைவாகும் என அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.


மேலும், இது நீதியல்ல, சில மேற்கத்திய அரசியல்வாதிகள் பணத்தின் மூலம் செல்வாக்கு செலுத்தி, சலுகைகளை அனுபவித்து, நமது தேசத்தின் நல்லிணக்கத்தை அவதானத்திற்கு உட்படுத்துவதாக பாராளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.


இன்று நாம் அனுபவிக்கும் சுதந்திரம் கடினமான முடிவுகளால் பெறப்பட்டது என்பதை வடக்கு மற்றும் தெற்கு மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.


இந்த தடைகள் ஊடாக நமது இராணுவத்தின் மன உறுதி வீழ்ச்சிடைய கூடும் எனவும், இதுபோன்ற மற்றொரு நெருக்கடி ஏற்பட்டால், இராணுவத்திறக்கு போராடுவதற்கு தைரியம் இல்லாமல் போகலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


அத்துடன், இந்த தடைகளுக்கு பின்னால் உள்ளவர்கள் தமிழ் சமூகத்தின் பாதுகாப்பைப் பற்றி கவலைப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.


சமூகங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்திற்கு ஒருபோதும் எவரையும் தடையாக இருக்க அனுமதிக்க மாட்டோம் என்று அவர் இதில் குறிப்பிட்டுள்ளார்.


இதன்போது,  சில சர்வதேச அரசு சாரா நிறுவனங்கள் மூலம் சமூகங்களுக்கு இடையில் பிரிவினையை ஏற்படுத்துவதற்காக சலுகைகளைப் பெறும் சில தமிழ் அரசியல்வாதிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு ஆளாக வேண்டாம் என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, தமிழ் சமூகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.


இதற்கிடையில், வெளிநாட்டு சக்திகள் இலங்கைக்கு சமாதானத்தை ஏற்படுத்தி கொடுத்தவர்களை தாக்கும்போது, அரசாங்கம் அவர்களை பாதுகாக்கிறதா அல்லது மௌனமாக இருக்கிறதா என்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கேள்வி எழுப்பியுள்ளார்.

 

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது X பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, அனைத்து சந்தர்ப்பங்களிலும் நமது போர் வீரர்களை பாதுகாப்போம் என்றும், அவர்கள் செய்த தியாகங்கள் நமது சமாதானத்தை பாதுகாத்தன என்றும், அவர்களுடைய பாரம்பரியத்தையும் சீர்குலைக்க நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் எனவும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.