முஸ்லிம் காங்கிரஸின் அடுத்த Mp யார்..?
- Anzir -
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மட் சாலி நழீம், தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தவதாக அறிவித்துள்ளதை அடுத்து, அப்பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போதைக்கு முஸ்லிம் காங்கிரஸின் தேசியப் பட்டியல் எம்.பி. பதவி, யாருக்கும் வழங்கப்பட மாட்டாது.
உள்ளுராட்சி சபைத் தேர்தல் முடிந்த பின்னர், அதுதொடர்பில் கட்சி முடிவெடுக்கும் .
மு.கா. சார்பில் உள்ளுராட்சி சபைகளை கைப்பற்றும் பிரதேசங்களுக்கும், அவற்றை கைப்பற்ற தலைமை தாங்கி பங்களிப்புச் செய்பவர்களுக்கும், சுழற்சி அடிப்படையில் தேசியப் பட்டியல் எம்.பி. யை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த தகவலை Jaffna Muslim இணையத்திடம் அக்கட்சியின் மூத்த வட்டாரங்கள் உறுதிப்படுத்தின
Post a Comment