Dr அர்ச்சுனா பாராளுமன்ற சிறப்புரிமை மூலம், முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பைக் கக்குகிறார் - சட்டத்தரணி சுவஸ்திகா
நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் அர்ச்சுனா ராமநாதன், தனது நாடாளுமன்ற உரையில் பெண்ணொருவரை ‘விபச்சாரி’ என பெயர் சொல்லி கூறியமையை, பெண்கள் உரிமை மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் சட்டத்தரணி சுவஸ்திகா அருளிங்கம் கண்டித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் அர்ச்சுனா ராமநாதன், நாடாளுமன்றத்தில் ஒரு பெண்ணை ‘விபச்சாரி’ என்று கூறினார். நாடாளுமன்றத்தில் இதை யாராவது எதிர்த்தார்களா? அந்தப் பெண்ணின் பெயரை ‘ஹான்சாட்’ (hanzard) இல் இருந்து நீக்க வேண்டும் என்று கோரினார்களாக என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
‘டொக்டர் அர்ச்சுனா ராமநாதன் தனது நாடாளுமன்ற சிறப்புரிமையைப் பயன்படுத்தி பெண்களைத் துன்புறுத்துகிறார். நாடாளுமன்ற உறுப்பினராக தனது சிறப்புரிமையைப் பயன்படுத்தி முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பைக் கக்கி வருகிறார்’
‘இது நாடாளுமன்ற கலாச்சாரத்திற்குப் புதியதல்ல. ஆனால் ஒரு பெண்ணின் பெயர் தவறாக உச்சரிக்கப்படும்போது – அந்தக் கூற்றுக்களை ‘ஹான்சாட்’இல் இருந்து நீக்கப்படும் காலத்தில் நாம் இருக்கிறோம் என்று நினைத்தேன்’ எனத் தெரிவித்துள்ளார்.
Post a Comment