மரண வீட்டிற்கு அழைக்கப்பட்ட பொலிஸார் - ஏன் தெரியுமா..?
கொழும்பின் புறநகர் பகுதியான பத்தரமுல்லயில் இறுதிச் சடங்கு வீட்டில் நேற்று -28- பதற்ற நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளது.
அரசியல் உரையாடல் ஒன்று நீண்ட தூரம் சென்றமையினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கலல்கொட பகுதியில் இடம்பெற்ற இறுதிச் சடங்கின் போது இரண்டு நபர்களுக்கு இடையே ஏற்பட்ட அரசியல் வாக்குவாதம் வன்முறையாக வெடித்துள்ளது.
வாக்குவாதம் முற்றிய நிலையில் இறுதிச் சடங்கிற்கு வந்தவர்கள் இரண்டு குழுக்களாக பிரிந்து அடிதடியில் ஈடுபட்டுள்ளனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்ட பொலிஸார் அழைக்கப்பட்ட நிலையில், வன்முறை நிலை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இறுதி சடங்கு நிகழ்விற்கு பெருமளவு மக்கள் ஒன்று கூடியிருந்தனர். எனினும் வன்முறையின் போது எவருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment