Header Ads



எமது படங்களை போட்டு கேள்வி கேட்கின்றனர், அர்ச்சுன பற்றியும் எடுத்துக்கூறிய முனீர் முழப்பர்


பொலிஸாருடன் நடந்துகொள்ள தெரியாத, ஹொட்டல் ஒன்றுக்கு சென்று முறையாக நடந்துகொள்ள தெரியாத ஒருவருக்கு நாங்கள் பதிலளிக்க சென்றால், அல்லது அவர் தொடர்பில் சமூகவலைத்தலங்களில் கதைக்க முற்பட்டால், நாங்கள் அவரைவிட கீழ் மட்டத்தில் இருக்கிறோம் என்பதே எனது நம்பிக்கையாகும். அனாலே முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பில் விமர்சித்த பாராளுமன்ற உறுப்பினருக்கு பதிலளிக்க முயற்சிக்கவில்லை என பிரதி அமைச்சர் முனீர் முழப்பர் தெரிவித்தார்.


பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (17) இடம்பெற்ற 2025 வரவு செலவுத் திட்டத்தின் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மற்றும் சுற்றாடல் அமைச்சுகளின் நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.


அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,


எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பில் விமர்சித்து குற்றச்சாட்டுக்களை தெரிவித்து வந்தார். அவரின் குற்றச்சாட்டுக்களுக்கு ஆளும் கட்சியில் இருக்கும் நாங்கள் ஏன் பதிலளிக்காமல் இருக்கிறது என பலரும் சமூவலைத்தலங்களில் எமது படங்களை பிரசுரித்து கேள்வி கேட்டு வருகின்றனர்.ஆனால் அல்குர்ஆனில் அறிவில்லாத, முட்டாள்கள் உங்களுடன் தர்க்கம் செய்யும்போது அவர்களுக்கு அமைதி உண்டாகட்டும் என கூறுங்கள் என தெரிவிக்கிறது. 


குறித்த உறுப்பினர் அன்று சிறுவயது பிள்ளைகளின் திருமணம் தொடர்பில் இந்த சபையில் தெரிவித்திருந்தார். ஆனால் ஒரு தந்தையாக தனது பெண் பிள்ளை திருமணம் முடிப்பதற்கு உடல் ரீதியாக, மன ரீதியாக தயாராக இருக்கும் சந்தர்ப்பத்தில் திருமணம் முடித்துக்கொடுக்குமாறே இஸ்லாம் தெரிவிக்கிறது.


மாறாக அங்கு வயது எல்லை எதுவும் குறிப்பிடப்படவில்லை என்தை அவருக்கு தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.


பெண்களின் உரிமை தொடர்பில் கதைக்கும் அவர், கண்ணாடி ஒன்றுக்கு முன் சென்று, தான் எந்தளவு பெண்களை கீழ்தரமாக செயற்படுத்தி இருக்கிறார் என்பதை கேட்டுக்கொள்ள வேண்டும். அவர் ஒரு சந்தர்ப்பத்தில், எமது பக்கத்தில் இருக்கும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக மிகவும் மோசமான வார்த்தை பிரயோகங்களை பயன்படுத்தி வந்தார். அவர் கற்றுக்கொண்ட கலாசாரத்தில் அவ்வாறு இருப்பதால்தான் இவ்வாறு செயற்படுகிறாராே என நினைக்கிறேன்.


அத்துடன் பொலிஸாருடன் நடந்துகொள்ள தெரியாத, ஹொட்டல் ஒன்றுக்கு சென்று முறையாக நடந்துகொள்ள தெரியாத ஒருவருக்கு நாங்கள் பதிலளிக்க சென்றால், அல்லது அவர் தொடர்பில் சமூகவலைத்தலங்களில் கதைக்க முற்பட்டால், நாங்கள் அவரைவிட கீழ் மட்டத்தில் இருக்கிறோம் என்பதே எனது நம்பிக்கையாகும்.


அதனால் நாங்கள் வைறாக்கியத்தை வைறாக்கியத்துடன் தீர்த்துக்கொள்வதா அல்லது அதனை சினேகமான முறையில் தீர்த்துக்கொள்வதா என சிந்தித்துப் பார்க்க வேண்டும்.


அதேவேளை, நாங்கள் பள்ளிவாசல் மற்றும் வக்பு சபைகளில் அரசியல் தலையீடு மேற்கொண்டு நியமனங்கள் வழங்குவதாக எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் குற்றம் சாட்டி இருந்தார். ஆனால் கடந்த அரசாங்கமே ஹஜ் குழுவுக்கு அமைச்சருக்கு நெருக்கமானவர்களை நியமித்திருந்தார்கள்.


ஆனால் அந்தமுறை நாங்கள் நியமித்திருக்கும் ஹஜ் குழுவினர் எங்களுக்கு எந்தவகையிலும் ஆதரவளிக்காதவர்கள். அவர்கள் தகுதியானவர்கள் என்பதன் பிரகாரமே அவர்களை நியமித்துள்ளோம் என்றார்.


 எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

No comments

Powered by Blogger.