Header Ads



மக்களின் பாதுகாப்பை நாங்கள் உறுதி செய்துள்ளோம், தேசிய பாதுகாப்பிற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை


இலங்கையின் பல பகுதிகளில் பதிவான, துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களால் தேசிய பாதுகாப்பிற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.


ஊடகவியலாளர்களுக்கு இன்று (25.03.2025) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.


அவர் மேலும் தெரிவிக்கையில், மக்களின் பாதுகாப்பை நாங்கள் உறுதி செய்துள்ளோம். அதற்காக ஒரு சிறப்பு திட்டத்தை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம்.


நாடு முழுவதும் பொது மக்களின் பாதுகாப்பை நாங்கள் உறுதி செய்துள்ளோம். இது குற்றக் குழுக்களுக்கு இடையிலான மோதலாக உள்ளது.


எனினும் அதனால் தேசிய பாதுகாப்பிற்கு பெரிய தாக்கம் இல்லை. எங்கள் பொது பாதுகாப்பு அமைச்சு அதற்காக சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என குறிப்பிட்டுள்ளார். 

No comments

Powered by Blogger.