வியாழேந்திரன் சிறையில் அடைக்கப்பட்டது ஏன்..?
கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரன் ஏப்ரல் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இவர் முன்னிலைப்படுத்தப்பட்ட போது நீதவான் தனுஜா லக்மாலி இந்த விளக்கமறியல் உத்தரவை பிறப்பித்துள்ளார்.
மணல் அகழ்வு உரிமம் வழங்குவதற்காக 1.5 மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று இவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment