நீர்கொழும்பில் தேர்தல் நிலவரம்
- இஸ்மதுல் றஹுமான் -
எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் நீர்கொழும்பு மாநகர சபைக்கு முன்னாள் உறுப்பினர்கள் பலர் தமது கட்சிகளை விட்டும் சுயேற்சையாக களம் இரங்கவுள்ளனர்.
நீர்கொழும்பு மாநகர சபையின் முன்னாள் நகர பிதா தயான் லான்ஸா இம்முறை போட்டியிடுவதில்லை என தீர்மானித்ததுள்ளதாக கூறினார்.
நீர்கொழும்ல் முன்னாள் அமைச்சர் நிமல் லான்ஸா குடும்பத்தில் எவரும் இம்முறை போட்டியிடுவதில்லை. கடந்த தேர்தலில் மக்கள் அவர்களை புறக்கனித்ததினால் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளனர்.
பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப் படுத்திய முன்னாள் இரு பிரதி மேயர்களும் இம்முறை அவர்களின் சார்பில் சயேட்சைக் குழுக்களை களமிரக்கவுள்ளனர்.
ஐதேக நீர்கொழும்பு அமைப்பாளரும் சில உறுப்பினர்களும் இதே அடிப்படையில் சுயேற்ச்சையாக போட்டியிடுகிறார்கள்.
தமது கட்சிகள் மக்களிடையே செல்வாக்கை இழந்துள்ளனதால் தமது தனிப்பட்ட செல்வாக்கைப் பயன்படுத்தி வாக்குகளை பெற்றுக்கொள்ள முடியும் என்ற எதிர்பார்பில் இவர்கள் சுயேற்ச்சைக் குழுக்களை அமைத்து போட்டியிட தீர்மானித்ததுள்ளனர்.
தேசிய மக்கள் சக்தி, ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பன தனித்துப் போட்டியிடவுள்ளன.
முன்னாள் மேயர் தயான் லான்ஸா கருத்துத் தெரிவிக்கையில் நாம் நீர்கொழும்பில் பல அபிவிருத்தி திட்டங்களை மேற்கொண்டு மக்களுக்கு உதவிசெய்த போதும் மக்கள் கடந்த தேர்தல்களில் எமக்கு ஆதரவு அளிக்கவில்லை. அதனால் நாம் பொறுந்திருந்து பார்க்கிறோம். போட்டியிட வருமாறு பலர் எம்மை அழைக்கின்றனர்.
இன்று அரசாங்கததின் செல்வாக்கு குறுகிய காலத்தில் வீழ்ச்சியடைந்துள்ளன. மக்கள் எதிர்ப்பைக் காட்ட முற்பட்டுள்ளனர். காதினல் அவர்களும் வாய் திறக்க ஆரம்பித்துள்ளார் என்றார்.
Post a Comment