பால் மா விலையை அதிகரிக்க முடிவு
இறக்கமதி செய்யப்படும் பால் மா விலையை 4.7% இனால் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பால் மா இறக்குமதியாளர்கள் இம்முடிவை எடுத்துள்ளனர்.
ஏப்ரல் 01 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதியின் ரூ. 50 இனால் அதிகரிக்கும்.
அதற்கமைய, ரூ. 1,050 எனும் விலையில் விற்கப்படும் 400 கிராம் பால் மா பொதி ரூ. 1,100 ஆக விற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆயினும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பால் மாக்களின் விலைகள் தொடர்பில் இதுவரை எவ்வித அறிவிப்பும் விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment