Header Ads



ட்ரம்பின் நடவடிக்கையால் ஆசியாவில் வாகனங்களின் விலைகளில் வீழ்ச்சி



அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் மீது 25 சதவீத வரியை விதித்தமையை தொடர்ந்து ஆசிய வாகன களஞ்சிய சந்தைகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இது உலகளாவிய ரீதியிலான வர்த்தகப் போரை விரிவுபடுத்தியுள்ளதாக அமெரிக்காவுடனான நட்பு நாடுகள் குறிப்பிட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 


வாகன தயாரிப்புகளை இறக்குமதி செய்யும் நாடுகளில் மெக்ஸிகோ, ஜப்பான், தென்கொரியா, கனடா, மற்றும் ஜேர்மன் ஆகிய நாடுகள் பாரிய விநியோகஸ்தர்களாக செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.