மெல்பேர்ன் நகரில் ஹாபிளாகும் பொறியியலாளர் லுக்மான் ஷரீப்தீன் பல்கலைக்கழக பொறியியல்
பல்கலைக்கழகத்தில் பொறியியல் கற்றுக் கொண்டு, அல்குர்ஆனை கற்று, அதனை மனனம் செய்து பூர்த்தி செய்த முன்மாதிரியான இன்றைய நிகழ்வு வரலாற்றுப் பிரசித்தம் மிக்கது. இதனை சாதித்த எம் இளம் சகோதரர் பொறியியலாளர் லுக்மான் ஷரீப்தீன் பலருக்கு முன்மாதிரியாய் அமைகின்றார் என அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் அல்-ஹவாரி குறிப்பிட்டார்.
கடந்த சனிக்கிழமை (29 மார்ச் 2025) அன்று மெல்பேர்ண் நகரில் அமைந்துள்ள Virgin Mary மஸ்ஜிதில் நடைபெற்ற அல்குர்ஆன் மனன ‘ஹிப்ள்’ பூர்தியையிட்டு நடைபெற்ற பாராட்டு வைபவத்திலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
பொறியியலாளர் லுக்மான் மொனாஷ் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் காலத்தில் புனித அல்குர்ஆனை முழுவதுமாக மனனம் செய்து இளம் சமுதாயத்தினருக்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாக திகழ்கின்றார்.
இவர், அவுஸ்திரேலியாவை வதிவிடமாகக் கொண்ட கல்விமான் கலாநிதி அலவி ஷரீப்தீன் நழீமி மற்றும் ஆசிரியை பஸ்லி ஷரீப்தீன் அவர்களுடைய இரண்டாவது புதல்வராவார்.
மேலைத்தேய கலாச்சாரங்களுக்கு இரையாகி விடாமல் தமது பிள்ளைகளை இறைவன் பாதையில் வளர்த்தெடுப்பதற்கு மேலைத்தேயே நாடுகளில் வதிகின்ற கலாநிதி அலவி ஷரீப்தீன் போன்ற பெற்றோர்களின் கரிசனை, முயற்சி மற்றும் தியாகங்களினால் இவ்வாறான முன்மாதிரி இளைஞர்கள் உருவாக்கப்பட முடியும். கலாநிதி அலவி ஷரீப்தீன் அவர்களுடைய மூத்த மகனும் அல்குர்ஆனை ஹிப்ள் செய்கின்ற ஒருவர். அவர் புதிதாகப் பட்டம்பெற்று வெளியேறி வைத்தியக் கலாநிதியாக அரச வைத்தியசாலையில் பணிபுரிகின்றார்.
மஸ்ஜித் நிறைந்த நூற்றுக்கணக்கான இலங்கை மற்றும் பல் தேச முஸ்லிம்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வின் போது அல் ஹாபிள் லுக்மான் தராவீஹ் தொழுகையை நடாத்தினார். பெற்றோர் சார்பில் கலாநிதி அலவி ஷரீப்தீன் அவர்கள் உரையாற்றினார்.
அன்னாருடைய நல்ல அமல்களை அல்லாஹ் பொருந்தி கொள்ள வேண்டுமெனவும், இவ்வாறான சிறந்த ஹாபிளினைப் பெற்றெடுத்த அன்னாரின் பெற்றோருக்கு இறையருள் கிடைக்க வேண்டுமென மஸ்ஜித் இமாம் அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் அல்-ஹவாரி அவர்கள் இறுதியில் துஆச் செய்தார்கள்.
Post a Comment