Header Ads



இறக்குமதி செய்யப்படும் வாகனங்களை விடுவிப்பதில் தாமதம்


புதிதாக இறக்குமதி செய்யப்படும் வாகனங்களை  இலங்கை சுங்கத்திலிருந்து விடுவிப்பதில் ஏற்பட்டுள்ள தாமதத்தை சீர்செய்வதற்கு நிதி அமைச்சு மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் உடனடியாக தலையிடும் என அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.


இன்றைய தினம் -18- அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.


மேலும் தெரிவிக்கையில், ஐந்து வருடங்களின் பின்னர் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. பொறிமுறையில் குறைபாடுகள் இருப்பின் அதனை நிவர்த்தி செய்வதற்கு அரசாங்கம் தலையிடும்.


எனினும் வாகனங்களை விடுவிக்க அரசு தவறிவிட்டதாக குற்றம்சாட்டுவது நியாயமானது அல்ல என்றார்.


இறக்குமதி விதிமுறைகளில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக சுமார் 400 வாகனங்கள் 20 நாட்களுக்கும் மேலாக இலங்கை சுங்கத்தில் சிக்கியுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.