Header Ads



ஜனாதிபதியின் பங்கேற்புடன் சிறப்பு இப்தார், முஸ்லிம் அரசியல் தலைவர்களும் பங்கேற்பு (வீடியோ)


முஸ்லிம்களின் புனித ரமழான் நோன்பு மாதத்தையிட்டு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் பங்கேற்புடன் இப்தார் நிகழ்வு இன்று (14) பிற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்றது.


இஸ்லாமிய மதத் தலைவர்களும் ஏராளமான இஸ்லாம் பக்தர்களும் இதில் கலந்து கொண்டதுடன், மேலும் இஸ்லாமிய சமய நிகழ்வுகளுக்கு முன்னுரிமை அளித்து இந்த நிகழ்வு நடைபெற்றது.

https://www.facebook.com/share/v/1KdVcm34sB/

பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி இந்நிகழ்வில் வரவேற்புரை ஆற்றியதுடன், தேசிய ஒருங்கிணைப்பு பிரதி அமைச்சர் முனீர் முலாபரும் நிகழ்வில் உரையாற்றினர்.


செயிட் அப்துல்லா செஹீத் மௌலவி “ரமழான் மாதத்தின் முக்கியத்துவம்” என்ற தலைப்பில்  இந்நிகழ்வில்சிறப்பு ஆன்மீக சொற்பொழிவு ஆற்றினார்.


சிறப்பு பிரார்த்தனைக்குப் பிறகு, மாலை 6.23 மணிக்கு நோன்பு திறக்கப்பட்டதுடன் அதைத் தொடர்ந்து சிறப்பு விருந்து நடைபெற்றது.


அதனையடுத்து இப்தார் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தவர்களுடன் ஜனாதிபதி சிநேகபூர்வமாக கலந்துரையாடினார். 


புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி, வெளிநாட்டலுவல்கள், மேல்மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப், ஆளும் மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் உயர்ஸ்தானிகர்கள், தூதுவர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

No comments

Powered by Blogger.