கனடாவின் நீதி அமைச்சராகவும், அட்டர்னி ஜெனரலாகவும் கரி ஆனந்தசங்கரி நியமனம்
கனடாவின் நீதி அமைச்சராக கரி ஆனந்தசங்கரி நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் அட்டர்னி ஜெனரலாகவும், மற்றும் கிரவுன் - இனிஜினஸ் ரிலேஷன்ஸ் மற்றும் வடக்கு விவகாரங்கள் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
மார்க் கார்னி தனது முதல் அமைச்சரவையை வெளியிடும் ஒரு பகுதியாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாகும், இதன் மூலம் இந்தப் பதவியை வகிக்கும் முதல் தமிழ்-கனடியர் என்ற பெருமையும் அவர் பெற்றுள்ளார்.
தமிழ் பாரம்பரியத்தைச் சேர்ந்த ஒருவருக்கு மேற்கத்திய அரசாங்கத்தில் இவ்வளவு மூத்த பதவி வழங்கப்படுவது இதுவே முதல் முறை எனலாம்.
Post a Comment